Wednesday, March 12, 2014

பெண் சம்மட்டி - வீதி நாடகம் - உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -6.


மார்ச் 7 அன்று சோழிங்கநல்லூர் சந்திப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பில் பின்வரும் நாடகம் நடைபெற்றது.


பெண் சம்மட்டி - வீதி குறு-நாடகம் - ஆக்கம் - ஏர்வளவன்.

காட்சி - 1

பெண் : அப்பா...! நான் பாஸ் ஆயிட்டேன்...

அப்பா : பன்னிரண்டு தான! Ph.D இல்லையே...

பெண் : Ph.Dயும் ஒரு நாள் முடிப்பேன் பாருங்க... | அப்பா! ரெண்டு Engineering Collegeல Application வாங்கிருக்கேன். ஏதாவது ஒரு Collegeல நிச்சயம் சீட்டு கிடைச்சிரும்.

அப்பா: Engineeringலாம் எதுக்குமா? | நிறையா செலவு ஆகும். | உன் கல்யாணத்துக்கு சேத்துவச்சது எல்லாம் காணாம போயிரும்.

பெண்: அப்பா! Loan எடுத்து படிக்கலாம்பா. | அப்புறம்கூட Loanன பத்தி | நீங்க கவலை பட வேண்டாம். | நான் வேலை பாத்து அத அடச்சுக்கிறேன்.

அப்பா: அது இல்லமா! | நம்ம பாலாஜி மாமாவுக்கு தெரிஞ்சு ஒரு arts College இருக்குதான். | பொண்ணுங்க மட்டும் படிக்கிற
Collegeன்னு சொன்னார். | அது தான் Safeம் கூட. | Engineering Collegeல அந்த மாதிரி இருக்குதான்னு தெரியலமா. |

பெண்: Computer programsலாம் | என்னால சீக்கிரம் முடிக்கமுடியுது. | நான் Engineering படிச்சா நல்லதுன்னு நினைகிறேன். | Arts College மட்டும் பாதுகாப்புன்னு சொல்லிற முடியுமா? | அப்படி பாத்தா வீட்ல தான் இருக்கணும். |

அப்பா: நான் சொல்லறத சொல்லிட்டேன். | அப்புறம் உன் விருப்பம். |

*** பளார்***

(பொம்மை சுத்தியல் போன்ற ஒன்றை கொண்டு பெண்ணின் தலையில் அடித்து காட்சியை நிறுத்துதல்)


தொகுப்பாளர்(ஆண்): மென்மையாக தனது தந்தையை சமாளித்து நகர்கிறாள். அந்த பெண் விரும்பியபடி படித்து முடித்துவிட்டு வேலையில் அமர்கிறாள். தனது கல்வி, வேலையை அவள் தேர்வு செய்யும்போதெல்லாம், இங்கே ஒரு பெண் போராளி ஆகிறாள்! பெண்ணியவாதி ஆகிறாள்.


காட்சி - 2

அண்ணன்: ஏய்! நீ Collegeக்கு CollegeBusல போன... இப்போ வேலைக்கு உங்க Companyல Cab facilityய நிறுத்திட்டாங்கன்னு சொல்ற... அப்புறம் Govt. Busல போயிட்டு அவன் இத சொன்னான். இவன் கிண்டல் பண்றான்னு அழுதுகிட்டு இங்க வராத.

பெண்: அவ்வளவு அக்கறை இருக்கிறவன். தங்கச்சிக்கு ஒரு Scooty வாங்கி கொடுக்கவேண்டியது தான? பத்திரமா போய்கிட்டு வருவாள்ல?

அண்ணன்: எதுக்கு வண்டில Scene போடுறதுக்கா?

பெண்: நான் Sceneன போடுறேன், இல்ல வண்டிய கீழ போடுறேன். ரொம்ப அக்கறையா பேசுன? இப்போ மழுப்பாத...

அண்ணன்: என்கிட்ட அவ்வளவு காசுலாம் இல்ல... வேண்ணா Cab Facility இருக்குற Companyல வேலைய தேடு.

பெண்: உனக்கு Bikeகு வாங்க மட்டும் அப்பாகிட்ட காசு இருக்கும். எனக்குன்னு வந்தா... உங்க ரெண்டு பேருட்டயும் ஒன்னும் இருக்காது. அடுத்த மாசம், என் Educational Loan முடியும். அப்புறம் Loanன போட்டு நான் வண்டிய வாங்கிக்கிறேன்.

அண்ணன்: நாங்க சொன்னா கேட்கவா போற? நீ என்னவும் பண்ணு.



*** பளார்***

(பொம்மை சுத்தியல் போன்ற ஒன்றை கொண்டு பெண்ணின் தலையில் அடித்து காட்சியை நிறுத்துதல்)

தொகுப்பாளர்(ஆண்): திறம்பட அவள் தனது அண்ணனை எதிர்கொள்கிறாள். கல்வி கடனை முடித்த கையோடு அந்த பெண் விரும்பியபடி தனக்கென ஒரு அழகிய வண்டியை வாங்கிகொள்கிறாள். தனது தேவையை தானே நிறைவு செய்யும் போதெல்லாம், ஒரு பெண் போராளி ஆகிறாள்! பெண்ணியவாதி ஆகிறாள்.


காட்சி - 3

(இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே)

(Sleeveless அணிந்திருக்கிறாள்)

இருசக்கர ஆண்கள்: மச்சி! அவ Dressஅ பாறேன். எப்படி சுத்துதுங்க பாறேன்.
(பின் முகத்தையும் உடலையும் மூடிகொள்கிறாள்)

இருசக்கர ஆண்கள்: இவளுங்க ரொம்ப அழகிங்க நெனைப்பு... களத்துனா சகிக்காது மச்சி.

பெண்: Hello! ஒரு நிமிஷம் நில்லுங்க... நான் தினமும் என்ன dressஉ போடணும்ன்னு நீங்க ஒரு List சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். :-)

இருசக்கர ஆண்கள்: ரொம்பதான் தைரியம். இந்த வாய உன் dressல காட்டலாமே...?. எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சொல்றோம்.

(பொம்மை சுத்தியல் போன்ற ஒன்றை கொண்டு பெண்ணின் தலையில் அடித்து காட்சியை நிறுத்துதல்)
தொகுப்பாளர்(ஆண்): உடையை ஊடுருவிப்பார்க்கும் இந்த சமூகத்தையும் அவள் எதிர்கொள்கிறாள். தனது ஆடையை தானே தேர்வு செய்யும் போதெல்லாம், ஒரு பெண் போராளி ஆகிறாள்! பெண்ணியவாதி ஆகிறாள்.

காட்சி - 4

அப்பா: Hello!

பெண்: Hello! ஆங்...சொல்லுங்கபா

அப்பா: யம்மா! மாப்பிள்ள வீட்டில இருந்து கூப்பிட்டு இருந்தாங்க. இன்னைக்கு மாப்பிளை உன்ன Officeல வந்து பார்ப்பாராம்.

பெண்: ஏம்பா? ஒருவருஷம் கழிச்சி பாத்துக்கலாம்ன்னு சொன்னேன்லாப்பா?

அப்பா: நல்ல இடம்மா... நீ பேசிப்பாரு! நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன். நான் சொல்றத கேளு.


காட்சி - 5

மாப்பிள்ளை: இந்த Officeசு கொஞ்சம் சின்னது தான்; U.Sல எல்லாம் Perfectட்டா இருக்கும்.

பெண்: U.Sஆ அங்கே தான் வேலை பாக்குறீங்களா?

மாப்பிள்ளை: Uncle சொல்லல?, கல்யாணத்துக்கு அப்புறம் நீங்களும் அங்க வந்துறுவீங்க.

பெண்: நான் இங்க வேலை பாக்குறேன், இது எனக்கு பிடிச்சிருக்கு. Sorry நீங்க வேற இடம் பாருங்க. அப்பாட்ட நான் சொல்லிக்கிறேன்.

மாப்பிள்ளை: நல்ல குடும்பம்ன்னு சொன்னாங்க! அப்புறம் உங்க விருப்பம்.

தொகுப்பாளர்(ஆண்): பின்னர் தனக்கு பிடித்த இணையை தேர்வு செய்து, திருமணமும் செய்து கொண்டாள். தனது வாழ்க்கையை அவள் முடிவு செய்யும் போதெல்லாம், ஒரு பெண் போராளி ஆகிறாள்! பெண்ணியவாதி ஆகிறாள்.



காட்சி - 6

பெண்: கொஞ்ச நாளா எனக்கு எந்த Projectம் கொடுக்காம வச்சிருக்கீங்க?

மேலாளர்: கல்யாணத்துக்கு Leave எடுத்தீங்க. அதனாலேயே உங்களுக்கு புது Project கொடுக்க முடியாம போச்சு. நல்ல Performer தான் அதுல எந்த சந்தேகமும் இல்ல. இனி Leave எடுக்கிறது..... கொஞ்சம் பாத்து செய்யுங்க?

பெண்: ஆனா...! நான் Conceive ஆகி இருக்கேன். CheckUpக்கு permission தேவைப்படும்.


மேலாளர்: ஓ.. Congratulations... Thatz a Good news. ஆனா உண்மைய சொல்லனும்ன்னா உங்க Profile எந்த Projectளையும் Match ஆகல. உங்களுக்கு இங்க Growth இருக்கும்ன்னு சொல்ல முடியாது. The gates are open though.


பெண்: அது உண்மையில்லை; உண்மை என்னனா Treatment, Deliveryன்னு Leave அதிகம் எடுக்கவேண்டிவரும். அதனால வீட்டுக்கு அனுப்பிறலாம்ன்னு நினைச்சுடீங்க. I can See, u trying to get rid of me, Sir!
மேலாளர்: Professionalலா பேசுங்க! நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.

பெண்: ஓ... நான் வேலைய Resign பண்றேன், Sir. என் திறமைய மதிக்கிற Companiesம் இருக்கும். Thanks for your Concern.
மேலாளர்: Your Call, நீங்க தவறா நினைக்கலன்னு நினைக்கிறன். உங்க விருப்பபடியே ஒரு Official mail மட்டும் எனக்கு அனுப்பீருங்க. மிச்சத்த நான் பாத்துகிறேன்.


*** பளார்***
(பொம்மை சுத்தியல் போன்ற ஒன்றை கொண்டு பெண்ணின் தலையில் அடித்து காட்சியை நிறுத்துதல்)
தொகுப்பாளர்(ஆண்): தனது வேலைக்கான நீதியை பெரும் போதெல்லாம், ஒரு பெண் போராளி ஆகிறாள்! பெண்ணியவாதி ஆகிறாள்.

(பெண், பொம்மை சுத்தியல் போன்ற ஒன்றை கொண்டு தொகுப்பாளர் தலையில் அடித்து பேச்சை நிறுத்துதல்)
*** பளார்***

பெண்: நிறுத்துங்க! ஒரு பெண் போராளி ஆகிறாள், ஒரு பெண் பெண்ணியவாதி ஆகிறாள் என முத்திரை குத்தி, இந்த சமூகத்தில் இருந்தும், சக பெண்களிடம் இருந்தும் பிரித்து வைக்கும் இந்த போக்கை நிறுத்தவும்.

பாதுகாப்பும், சமத்துவமும் எனது உரிமை; வேண்டுகோள் அல்ல - நாம் பெண் எனபடுவோம்.

(தந்தை, அண்ணன், மாப்பிள்ளை ... என ஒவ்வொருவர் தலையிலும் அடித்து மீண்டும் மீண்டும் பெண் சொல்லுதல்.)
பாதுகாப்பும், சமத்துவமும் எனது உரிமை; வேண்டுகோள் அல்ல - நாம் பெண் எனபடுவோம்.

6 comments:

  1. மிக அருமை !
    தோழர்களுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    தோழர்களின் முயற்சிக்கு பாராட்டுக்ஙகள்

    ReplyDelete
  3. நன்றி தோழர்.முத்துகுமார்.

    ReplyDelete