Friday, March 28, 2014
மோடி - வெளிச்சங்களின் நிழலில்! நூல் வெளியீடு
மோடி = வளர்ச்சி ?
மோடி = முன்னேற்றம் ?
குஜராத் - மோடி - வளர்ச்சி - முன்னேற்றம் - தமிழகம் - எதிர்காலம் குறித்து விரிவாக அலசும்
"மோடி - வெளிச்சங்களின் நிழலில்" - நூல் வெளியீடு
நாள்: 30/03/2014 - கிழமை: ஞாயிறு - நேரம்: மாலை 5 மணி -
இடம் - வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், பனகல் பூங்கா, தியாகராயர் நகர், சென்னை.
நூல் ஆசிரியர்: கதிரவன் நாகரத்தினம் :
ஆசிரியர் குறிப்பு: தோழர். கதிரவன், சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஊடக அணி உறுப்பினர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், தற்பொழுது பெங்களூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
தோழர்.கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர்.கோவை இராமக்கிருஷ்ணன், பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தோழர்.மீ.த. பாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சி(மா.லெ), மக்கள் விடுதலை, தமிழ்நாடு
தோழர்.தைமிய்யா, தலைமை கழக செயற்குழு உறுப்பினர்,த.மு.மு.க
தோழர்.அமீர் அம்சா, மாநில செயலாளர், எஸ்.டி.பி.ஐ
தோழர்.சிந்தனை செல்வன், மாநில பொது செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
பதிப்புரையிலிருந்து சில வரிகள்....
‘வளர்ச்சி’யின் பெயரால் மோடியை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம், ஈழத்தின் பெயரால் காங்கிரசுக்கு மாற்று என்று கருதிக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் மற்றொரு சாரார், என இரு சாரார் தமிழகத்தில் உள்ளனர். தேர்தலைக் கடந்து நீண்ட காலக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் சங் பரிவார் அமைப்புகள், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சமூகத்தின் ஆழ்மட்டத்தில் வேரூன்றி கிளைப் பரப்பக் கூடியவை. இதற்கு மாற்றாக , நாம் தொடர்ந்து புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தும், போலி வளர்ச்சி கொள்கைகளை எதிர்த்தும் பரப்புரை தொடர வேண்டியுள்ளது. மேலும் மிக எளிதாக பலியிடக்க கூடிய மக்கள் பிரிவினராக இஸ்லாமியர்களைக் கருதுகின்றது இந்திய ஆளும்வர்க்கம்.
இந்தப் பின்னணியிலே ‘மோடி - வெளிச்சங்களின் நிழலில்’ என்ற இந்நூலை வெளியிடுகின்றோம். இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு ஒரு கருவியாக இந்நூல் பயன்படும் என்று நம்புகிறோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்ட பல்வேறு அரசியல் நீரோட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக ஆற்றல்கள், அரசியல் இயக்கங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். ஏராளாமான உண்மைகள், தகவல்கள், எளிய நடை, சிறப்பான எடுத்துக்காட்டுகள் என்ற சிறப்பம்சங்களைத் தாண்டி அவருடைய ஜனநாயக உணர்வின், மக்கள் மீது கொண்ட பற்றின் எழுத்து வடிவமே இந்நூல்.
-----
இந்த நூல் எமது இயக்கத்தின் பதிப்பகமான "சிற்றுளி பதிப்பகத்தின்" முதல் வெளியீடாக வெளி வருகின்றது. இந்நூலிற்கு தோழர் விடுதலை இராசேந்திரன் அணிந்துரை எழுதியுள்ளார்.
நூல் விலை : 25 ரூபாய்
சேவ் தமிழ்சு இயக்கம்
98844 68039
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment