Tuesday, July 9, 2013

பா.ம‌.க‌-வை தனிமைப்படுத்துவோம், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கி ந‌க‌ர்வோம்.இளவரசனின் உயிர் தின்ற சாதி வெறி அரசியல் கண்டனக்கூட்டம். கண்டன கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இளவரசனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, இரண்டு நிமிடம் மெளன அஞ்சலியும் தோழர்களால் கடைபிடிக்கப் பட்டது. பிறகு கூட்டம் ஆரம்பமானது.லயோலா கல்லூரி மாணவர் தோழர் சந்தோஷ் முதலாக தனது கண்டன உரையை பதிவு செய்தார். மாணவர்கள் போராட்டத்துக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அப்போராட்டங்களை முன்னெடுக்க உத்திகள் தான் இன்னும் சரியாக வகுக்கப்படவில்லையென்று தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார்.ஊடகங்கள் இளவரசன் மரணத்தை ஒரு செய்தியாக மட்டுமே பார்ப்பதாகவும், இதை ஒரு தனிமனித பிரச்சினையாக கொள்ளாமல் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிரான ஒரு பிரச்சினையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.மேலும் இது ஒரு வெறுமனே கண்டனக் கூட்டமாக அமையாமல், மாணவர்கள் மற்ற களப்போராளிகளோடு இணைந்து சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தை முன்னெடுக்கும் உத்திகள் வகுக்கும் கூட்டமாகவும் மாற‌ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தின் தோழர் சேகர் பேசும் போது, இதை ஒரு அனுதாபமாக, இரக்கமாக கடந்து செல்லாமல், இளவரசன் மரணத்தை நம்முடைய கோபமாக மாற்ற வேண்டும்.இறப்பின் வலியை நாம் உணர வேண்டும். அவ்வலியை சமூகம் உணர வைக்க நாம் களமிறங்கி போராட வேண்டும். பல போராட்டங்களை ஒருங்கிணைத்த சேவ் தமிழ்சு இயக்கம், அப்போராட்டத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும்.அதற்கு வடசென்னை தொழிலாளர்கள் சார்பாக, தன்னால் முடிந்த சக்திகளை திரட்டப்போவதாகவும், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் நம் வேலைகளைச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் செந்தில் பேசும் பொழுது, இளவரசன் தந்தை இளங்கோவன் இது தற்கொலையல்ல, கொலையே என்று தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.மேலும் கொலைக்கு பொறுப்பாக பா.ம.க உறுப்பினர்களின் பட்டியலையும் அவர் அளித்திருந்தார்.சிலர் உடலை அடக்கம் செய்து விடலாமெனவும் ஒரு போக்கும் இருக்கிறது.ஆனால் மறு உடற்கூறு சோதனை செய்யாமல் உடலை பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.தருமபுரி வன்முறையின் போது, இராமதாஸ் எரிக்கப்பட்ட தலித் குடியிருப்புகளைப் பற்றி பேசவில்லை. ஆனால் திவ்யாவின் தந்தை நாகராஜின் தற்கொலையைப் பற்றி மட்டுமே பேசினார். தொடர்ச்சியாக அவர் தலித் எதிர்ப்பு அரசியலை மட்டுமே விதைத்து வந்திருக்கிறார். இளவரசன் மரணம் கொலையாக இருந்தாலும், தற்கொலையாக இருந்தாலும், அதற்கு முழு குற்றஞ்சாட்டப்பட வேண்டியதும் தனிமைப்படுத்த வேண்டியதும் பா.ம.க-வும், இராமதாசுமே. எனவே இனிமேலும் அரசியல் அமைப்புகள், கட்சிகள் குறைந்த பட்ச கரிசனம் கூட இராமதாசின் பா.ம.க மீது காட்டக்கூடாது. பா.ம.கவை அரசியல் தளத்திலிருந்து முற்றாக புறக்கணிக்க வேண்டும் என தோழர் செந்தில் அழைப்பு விடுத்தார். பா.ம.க-வை நாம் புறக்கணிப்பது இனிமேல் யாரும் சாதி அரசியலை முன்வைக்க‌ அச்ச‌ப்ப‌டும்ப‌டி இருக்க‌வேண்டும்.அடுத்து பா.ம.கவின் இவ்வன்கொடுமையில் தமிழக அரசின் பங்கையும் தோழர்.செந்தில் சாடினார். தருமபுரி பகுதியானது, நக்சல் பாரி இயக்கத்தின் பொருட்டால், ஏற்கெனவே உளவுத் துறை கண்காணிப்பில் இருக்கும் ஒரு பகுதி. இந்தப் பகுதியில் ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை எப்படி நடந்தது ? எப்படி காவல்துறைக்கு தெரியாமல் போனது ? காவ‌ல்துறை இவ்வன்முறையை தெரிந்தே தான் அனும‌தித்திருக்கிற‌து.மேலும் வ‌ன்னிய‌ர் ச‌ங்க‌ சித்திரைத் திருவிழாவில், பா.ம‌.க‌வின‌ரின் கீழ்த்த‌ர‌மான‌ த‌லித் எதிர்ப்பு சாதிவெறி பேச்சையும் அவ‌ர்க‌ளின் செயல்பாடுகளையும் தமிழக அரசு க‌ண்டிக்காம‌ல், வ‌ன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ்‌ வ‌ழ‌க்குகளைத் தொடுக்காம‌ல் உப்பு ச‌ப்ப‌ற்ற‌ வ‌ழக்குக‌ளைப் போட்ட‌து ம‌ட்டுமில்லாம‌ல், இன்னும் இள‌வ‌ர‌ச‌ன் ம‌ர‌ண‌த்திலும் தமிழக அரசு க‌ள்ள‌ மெள‌ன‌ம் காப்பது கண்டிக்கத்தக்கது என்றார். மேலும் தருமபுரி வன்முறைக்கு பிறகு சேவ் த‌மிழ்சு இய‌க்க‌த்தின‌ர் பா.ம.க‌ இராம‌தாஸை எதிர்த்து தெருமுனைக்கூட்ட‌த்தில் பேசிய‌தால், அடுத்த‌டுத்த‌ நிக‌ழ்வுக‌ளுக்கு காவ‌ல்துறை சோலிங்க‌ந‌ல்லூர் ச‌ந்திப்பில் அனும‌தி ம‌றுத்ததையும் நினைவு கூர்ந்தார். இது அர‌ச இய‌ந்திர‌த்தில் சாதிய‌த்தின் நிலைகொள்ள‌லை காட்டுகின்ற‌து.(இன்று இளவரசன் இறப்பின் உண்மை நிலையை அறியும் பொருட்டு ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். சிங்கார வேலு ஏற்கெனவே சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக செயல்பட்டவர் என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளதால், சிங்கார வேலுவுக்கு இளவரசன் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை நடைபெற்றால் நியாயம் கிடைக்காது என்றும் ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என்றும் இளவரசனின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்)


சமத்துவ மக்கள் படையின் தோழர் சிவகாமி, இக்கண்டனக்கூட்டத்தின் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டார். இங்கு ஒரு உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. எந்த வித செயல்திட்டமும் இல்லாத, ஒன்று கூடி ஒப்பாரி வைக்கும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள தான் வெறுத்ததாகவும், தோழர் லெனின் அழைத்ததன் பேரிலேயே கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். தலித்துகள் மத்தியில் தான் இனி இந்த கூட்டம் நடைபெற வேண்டும். "உங்களோடு அல்ல" என்று மற்ற அரசியல் அமைப்புகளையும், இயக்கங்களையும் கடுமையாக சாடினார்.நீங்கள் எங்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. அயோத்தில் கரசேவைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுகள் செங்கல் கொண்டு சென்றது போல, தருமபுரி தலித் குடியிருப்புகளை சீரமைக்க நீங்கள் செங்கல் கொண்டு செல்லவில்லையெனவும், காட்டுமிராண்டிகள் மத்தியில் எடுக்க வேண்டிய ஆயுதத்தை தாம் முடிவெடுத்து விட்டதாகவும்,"எங்களுக்காக நீங்கள் இனி வேஷம் போட வேண்டாம். நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்" என்றும் காட்டமாக தனது கருத்துகளை பதிவு செய்து விட்டு வெளியேறினார். அடுத்தடுத்த உரைகளில் தோழர் சிவகாமியின் இந்தகருத்து விமர்சிக்கப்பட்டது. தோழர் விடுதலை இராசேந்திரன், சிவகாமியின் உணர்வுகளை தாம் மதிப்பதாகவும், ஆனால் அது ஒரு பாசிச போக்கு எனவும் குறிப்பிட்டார். தோழர் ஆளுர் ஷா நவாஸ், தலித்துகள் மட்டுமே இயக்கமாக ஒன்றிணைவது தான் இராமதாஸின் எதிர்பார்ப்பு, ஆனால் ஜனநாயக சக்திகள் தலித்துகளோடு ஒன்றிணைந்தது தான் இராமதாஸின் தோல்வி எனவும் குறிப்பிட்டார். அவர்களிருவரின் உரையை பின்வரும் பத்திகளில் சற்று விரிவாக பார்ப்போம்.


தோழர்.செல்வி கண்டன உரையாற்றுகின்றார்.


தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர் செல்வி, தனது உரையில் இளவரசனின் மரணத்திற்கு நீதிமன்றங்களும், நீதிபதிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றனர் என தெரிவித்தார். ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திவ்யாவிடம், இளவரசன் உங்களை துன்புறுத்தினாரா, அவரோடு இணைந்து வாழ விருப்பமா ? என்ற கேள்விகளை மட்டுமே கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முழுக்க, முழுக்க பா.ம.க நீதிபதிகளாகவே, இளவரசனையும் திவ்யாவையும் பிரிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே கேள்விகளை கேட்டனர். இளவரசனோடு வாழ்ந்து விட முடியுமென்று நம்புகிறாயா? அவரோடு உன்னால் இனியும் வாழ முடியுமா என்ற வரம்பு மீறிய கேள்விகளை கேட்டு திவ்யாவை நோகடித்திருக்கின்றனர். இந்த கேள்விகளை கேட்டவர் நீதிபதி கே.என்.பாட்சா.

ஆகவே இளவரசன் மரணத்திற்கு நீதிமன்றங்களும் ஒரு பொறுப்பாகும் என்று தனது கண்டனங்களை பதிவு செய்தார் தோழர் செல்வி. மேலும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களும் தலித்துகளும் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அடுத்து பேசிய தோழர். விடுதலை இராசேந்திரன், தமிழக அரசியலில் கடுமையாக‌ தோல்வியடைந்த பா.ம.க, மீண்டும் தனது சாதிய அணியை புத்தாக்கம் செய்து கொண்டு, சாதிய உணர்ச்சியை உயிரூட்டி அவர்கள் உருவாக்கிய ஒரு ஏற்பாடு தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த தவறான சமூகப்பார்வை இப்போது அவர்களுக்கே பூமராங் ஆக திரும்பியிருக்கிறது. இலைமறை காயாக இருந்த ஒரு பிரச்சினையை இராமதாஸ் கூர்மையாக்க முனைந்த போது, அது மிகப்பெரிய எதிர்வினையை ஆற்றி விட்டது. இப்போது இளவரசன் திவ்யா பிரச்சினை, அவர்களின் சாதிய வெறி அரசியலை முற்றாக தனிமைப்படுத்தி விட்டது. தமிழகத்தில் சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக எப்படி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றோமோ, அது போல சாதி வெறி அரசியலுக்கு, சாதியத்தை இயக்கமாக மாற்றும் முயற்சிகளுக்கு இனிமேலும் தமிழகத்தில் இடமில்லை என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்த நாம் தொடர்ந்து செயல்படவேண்டும்.இதை ஒரு நாடக காதல் என்று ராமதாஸ் பேசினார். ஆனால் தலித் இளைஞனான இளவரசன் உண்மையான காதலை தனது மரணத்தின் மூலம் நிரூபித்து விட்டான். எனவே யார் நாடக காதல் ஆடினார்கள் என்பது இப்போது அம்பலமாகி விட்டது. திவ்யாவின் தந்தை நாகராஜ் மரணத்தின் வழக்கில் இளவரசனையும் ஒரு காரணமாக சேர்த்தார்கள். ஆனால் ஏன் இளவரசன் மரணத்திற்கு பொறுப்பாக பா.ம.க ராமதாசையோ, வழக்கறிஞர் பாலுவையோ சேர்க்கவில்லை. மேலும் ஆட்கொணர்வு மனுவில் எப்படி அவர்கள் வயதை காரணம் காட்டி அது செல்லாத திருமணம் என்ற பிரச்சினையை எழுப்ப முடியும் ( வயது குறித்து குடும்ப நல நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு போட முடியும் )வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணையின் போது, தாயார் விரும்பினால் இளவரசனோடு வாழ விருப்பம் தெரிவித்த திவ்யா, எப்படி அடுத்த கட்ட விசாரணையில் பத்திரிக்கையாளர்கள் முன்பு தான் அப்படிச் சொல்லவேயில்லை என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பா.ம.கவின் அழுத்தமே காரணமாக இருக்கின்றது என தோழர் விடுதலை இராசேந்திரன் தெரிவித்தார்.இப்பிர‌ச்சினைக்கான‌ முழு முத‌ற்கார‌ணி சாதி தான். சாதிய‌த்தை முதன்மைப் படுத்தாமல், அரசு நிறுவனங்களான காவல்துறை நீதிமன்றங்களை முதன்மைப் படுத்துதல் சரியாக இருக்காது எனவும், இனி எந்த இயக்கமாக இருந்தாலும், சுற்றுச் சூழலுக்காக போராடும் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள் அனைவரும் தமது செயல்திட்டங்களில் ஒரு பகுதியாக சாதி எதிர்ப்புக் கருத்தியலை கொண்டியங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார் தோழர்.

அடுத்த பேசிய தோழர் தியாகு, இளவரசன் மரணத்திற்கு பா.ம.கவை குற்றஞ்சாட்டுவதில் எந்த தயக்கமும் தேவையில்லை. இது போன்று தமிழ்நாடெங்கும் சாதியப் படுகொலைகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. கள்ளர் சாதியைச் சேர்ந்த பெண், தலித் இளைஞனை காதலித்தாள் என்பதற்காக, தந்தையே தனது மகளை தூக்கி கயிற்றில் இறுக்கிக் கொலை செய்த கொடூர சம்பவத்தை நினைவு கூர்ந்த தோழர் தியாகு, நச்சு மரத்தின் வேர்களைக் களையாமல், இலைகளை மட்டுமே குறி வைத்தல் தவறு என்று கூறினார்.


பல்வேறு இயக்கங்களின் தொடர்ச்சியான பரப்புரைகளால் சாதி மறுப்புத் திருமணங்கள் ஆங்காங்கே சிறு அளவில் ஏற்புடையதாக மாறியிருந்தாலும், விழுக்காடு குறைவாக இருக்கிறது. அதிலும் இருவரில் தலித் அல்லாத திருமண விழுக்காட்டை விட இருவரில் ஒரு தலித் என்றால் இன்னும் குறைவு.சாதி மறுப்புத் திருமணங்கள் ஏற்புடையதாக மாறியிருப்பதற்கு புறநிலைக் காரணங்களாக பொருளியல் மாற்றங்களும் அகநிலை காரணங்களாக இயக்கங்களின் அயராத பணியும் நிகழ்ந்திருப்பதாக தோழர் தியாகு குறிப்பிட்டார். எனினும் தலித்துகளின் சிறு வளர்ச்சி கூட மாற்று சமூகத்தவரால் சகித்துக் கொள்ளப் படவில்லையெனவும் தெரிவித்தார்.இன்று இளவரசன் மரணத்தில், மழை பெய்து பா.ம.கவின் சாயம் கரைந்து அம்பலமாகி நிற்கின்றனர். அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது.

பா.ம‌.க‌வின் இந்த‌ செய‌ல்பாடு கொள்கை அர‌சிய‌லில் வீழ்ச்சியால் விளைந்த‌து. தேர்த‌ல் அர‌சிய‌ல் சாதிய ஊடுருவ‌லின் பொருட்டு நிக‌ழ்வ‌து. அர‌சிய‌ல் கொள்கை வீழ்ச்சிய‌டைந்து, மாநில‌ அர‌சின் அதிகார‌ம‌ற்ற‌ அதிகார‌த்திற்கு போட்டி போடும் நிலைமை தான் எஞ்சியிருக்கிற‌து.என‌வே இந்த‌ இர‌ண்டு கொலைக‌ளையும் சாதிய‌ம் தான் செய்திருக்கிற‌து. ஆக‌வே இந்த‌ சாதி ஒழிப்பில் யாருக்கு அக்கறை அதிக‌ம் என்ற‌ கேள்வி உருவானால், த‌லித்திய‌ம் தான் முன் நிற்கிற‌து. கார‌ண‌ம் த‌லித்திய‌ம் என்றாலே சாதியொழிப்பு தான். த‌லித்துக‌ள் தான் எல்லா சாதிக‌ளாலும் ஒடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ர். என‌வே காய‌த்திற்கு ம‌ருந்திட‌ வேண்டும். காய‌ம் ப‌ட்டு விட்டு வ‌லிக்கிற‌தே என்று அழுதால் அழுகை காய‌த்தை குண‌ப்ப‌டுத்தாது.தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் தோழர் இளையராஜா, "நமக்குள்ளே போராட வேண்டும்" என்ற கொள்கையின் ஓட்டைகள் குறித்து பேசினார். ஆதி திராவிடர் விடுதியில் அடிப்படை வசதிகளுக்காக போராடிய போது, தான் சந்தித்த பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டார். சாதிய ஒடுக்குமுறைகளுக்கெதிராக போராட மாணவ சக்திகளை அணி திரட்டி வருவதாகவும் தெரிவித்தார். ( 2: இக்கட்டுரையை எழுதும் இந்நேரத்தில் சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா ஆதி மாணவர் விடுதியில் தோழர் இளையராஜா தலைமையில் மாணவர்கள் பா.ம.க ராமதாஸை கைது செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியிருப்பதை அறிகிறோம் )

அடுத்து பேசிய லயோலா கல்லூரி பேராசிரியர் தோழர். லெனின், தருமபுரி வன்முறையின் போது, லயோலா கல்லூரி மாணவர்களின் களப்பணி குறித்து விளக்கமாக தெரிவித்தார். மாணவர்கள் எப்படி அரசியல் படுத்தப் பட்டிருக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டினார். இளவரனுக்கு தாம் அடைக்கலம் கொடுத்து, வேலை வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு இருந்ததாகவும் ஆனால் இறுதியில் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது எனவும் தெரிவித்த அவர், ஒரு கட்டத்தில் உணர்ச்சி மேலிட கதறி அழுதார். இங்கு பா.ம.க மட்டுமே சாதியை தூக்கிப் பிடிக்கவில்லை. இப்போது இருக்கும் திராவிட கட்சிகளும் சாதியத்தை கடைபிடித்து கொண்டுதானிருக்கின்றன எனவும் அவைகள் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ளல் வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.அடுத்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் வழக்கறிஞர் அமர்நாத்,
சாதியத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் எந்தவொரு அமைப்பையும் நாம் புறக்கணிக்க வேண்டுமெனவும் அவர்கள் தமிழ் தேசிய போர்வையில் ஈழ ஆதரவோடு கூட வருவார்களெனவும் தெரிவித்தார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் எப்படி முறையாக பயன்படுத்தப்படுகிறது என அரசு ஒரு அறிவிப்பைச் செய்ய வேண்டுமென வலியுறுத்திய தோழர் அமர்நாத், நீதிமன்றங்களில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி குறிப்பிட்டார்.ஒரு குற்றவாளியை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து விசாரிப்பதிலேயே, தற்போதிருக்கும் நீதிமன்றங்களில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் போது, இக்குற்றத்தில் தொடர்புடைய அனைத்து பா.ம.க குற்றவாளிகளையும் அழைத்து வந்து விசாரிப்பதென்பது இயலாத காரியம் தான். எனவே சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக, தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப் பட வேண்டுமென்றும் தற்போதுள்ள சூழ்நிலையில் அதுவே நமது முதன்மை கோரிக்கைகளுள் ஒன்றாக இருக்க வேண்டுமெனவும் தோழர் அமர்நாத் வலியுறுத்தினார்.தோழர் உதயனும், தோழர் நீதிராஜனும் பா.ம.க-வின் சாதி வெறி அரசியலுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தோழர் மாணவர் ராஜ்மோகன் இளவரசன் மரணம் குறித்தும் சாதிய வன்கொடுமை குறித்தும் தான் எழுதிய கவிதையை வாசித்தார்.இறுதியாக பேசிய தோழர். ஆளுர் ஷாநவாஸ், முஸ்லிமான‌ தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதால், எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி பேசிய அவர், தலித்துகளின் வலியை தன்னால் முற்றிலுமாக புரிந்து கொள்ள முடிகிறது எனவும்,
காதல் என்பது ஒரு இயங்கியல் போக்கு அதை ஒரு கலவரத்திற்கு காரணமாக சித்தரிக்கும் பொது புத்தியை கண்டித்தார் தோழர் ஷா நவாஸ்.பா.ம.க ராமதாஸின் இந்த போக்கு, வன்னிய பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான முயற்சி அல்ல. அது அன்புமணியை அமைச்சராக்க அவர் செய்யும் பாசிசம் தான் அது. அதிகாரத்தை நுகர்வதற்கான வெறி. ஈராக்கில் அமெரிக்கா செய்தது எப்படி பாசிசமோ, ஈழத்தில் இராஜபக்சே செய்த அதிகார வெறி எப்படி பாசிசமோ அதைப் போல ராமதாஸ் செய்ததும் பச்சை பாசிசம் தான்.பாசிசத்திற்கு எதிரி வேண்டும். அமெரிக்காவிற்கு முதலில் பின்லேடன் நண்பன் தான் ஆனால் தனது அதிகார வெறி பின்லேடனை எதிரியாக்கி அழித்தது. அதைப் போல ராமதாஸ் தன்னுடைய எதிரியாக தேர்ந்தெடுத்தது தலித்துகளை. இந்நிலையில் ராமதாஸுக்கு எதிராக போராடும் நம்முடைய அணி ஏற்கெனவே பலவீனமான அணியாக இருக்கிறது. இந்நிலையில் அதை மேலும் சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை விதைக்கக் கூடாது.தலித்துகளுக்கு எதிராக சாதிச் சங்கங்களை ஒன்றிணைத்த ராமதாஸ், தலித்துகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தனது திட்டம் வெற்றியாகி விடும் என்று கணக்கு போட்டார். ஆனால் ஒன்றிணைந்து ஜனநாயக சக்திகள். அவரின் திட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது இப்புள்ளியில் தான். எனவே மீண்டும் தலித்துகள் மட்டுமே ஒன்றிணைந்து போராடுவோம் என்று சொல்வது ராமதாஸின் சூழ்ச்சிக்கு நாமே களம் அமைத்து கொடுத்தது போலாகி விடும் என்று தனது கருத்துகளை பதிவு செய்தார் தோழர் ஆளூர் ஷா நவாஸ்.

பா.ம.க-வை அரசியல் களத்திலிருந்து தனிமைப்படுத்துவதிலும், சாதிக‌ள‌ற்ற‌ ச‌ம‌த்துவ‌ ச‌முதாய‌த்தை நோக்கியுமான‌ ந‌ம‌து ப‌ய‌ண‌த்தில் இந்த‌ க‌ண்ட‌ன‌ கூட்ட‌ம் ஒரு தொட‌க்க‌ புள்ளியே, இந்த‌ ப‌ய‌ண‌த்தில் சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் இறுதி இலக்குவரை தோழமை சக்திகளுடனும், சனநாயக ஆற்றல்களுடனும் இணைத்து பயணிக்கும் என உறுதிபூணுகின்றது.


அ.மு.செய்யது

சேவ் தமிழ்சு இயக்கம்.

16 comments:

 1. இளவரசனை விட உங்களை போன்றவர்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

  ReplyDelete
 2. பா ம க வை அழிக்கவேண்டும் என்ற வக்கிர எண்ணம்தான் அனைத்து தலைவர்கள் மனதிலும் குடிகொண்டுள்ளது.

  ReplyDelete
 3. வணக்கம் சகோ,

  நல்ல பதிவு.
  தோழர்களின்உரைகளின் காணொளியை பதிவேற்றினால் நன்று!!

  பாமக மட்டும் அல்ல, அனைத்து சாதி மதக் கட்சிகளை தனிமைப் படுத்துவோம்.

  தமிழால் இணைவோம்,மனிதம் வளர்ப்போம்

  நன்றி!!!

  ReplyDelete
 4. விரைவில் அனைத்து காணொளிகளும் வலையேற்றுப்படும் தோழர்.சார்வாகன்,

  சூசை ராஜ் அவர்களே, பா.ம.க-வை அழிக்க வேண்டும் என்று யாரும், எங்கும் கூறவில்லை, சாதி வெறி அரசியலை முன்னெடுத்திருக்கும் பா.ம.க-வை அரசியல் தளத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்றே கூறியுள்ளார்கள். இதில் வக்கிரம் எங்கிருந்து வருகின்றது? சாதி வெறி அரசியலை தூக்கிப்பிடிக்கும் பா.ம.க வக்கிரமானதா? அல்லது அந்த கட்சியை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தி மக்கள் சமத்துவமாக வாழ வேண்டும் என்னும் அரசியல் தலைவர்களின் எண்ணம் வக்கிரமா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகின்றோம்.

  தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் ஏன் எங்களைப் போன்றவர்களை பாவமாக பார்க்கின்றது எனத் தெரிந்துகொள்ளலாமா?

  ReplyDelete
 5. தலித் வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்பட்ட தேவர், கவுண்டர், வன்னியர் தனக்கென்று சாதி அமைப்பு உருவாக்கி கொண்டார்கள். தலித்துக்கு வி.சி என்று அமைப்பு உருவாகிய போது அது சாதி கட்சி இல்லை, அதே வன்னியருக்கோ, கவுண்டருக்கோ கட்சி அமைந்தால் சாதி கட்சியா?
  . சட்டம் என்பதும் அனைவருக்கும் சமமாக இருக்க வேன்டும். நியாயம் என்பதும் சமமாக இருக்க வேண்டும். தலித் என்றால் தப்பு செய்ய மாட்டார்கள், மற்ற சாதி மக்கள்தான் தவறு செய்வார்கள் என்பது தவறான கண்ணோட்டம்.

  (?)செய்யும் அடாவடி, கேலி, கிண்டல்களால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டோடு முடங்கிப்போன வன்னியர் பெண் குழந்தைகள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம். இதற்கெல்லாம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

  ReplyDelete


 6. சூசைராஜ் அவர்களே,

  தலித் வன்கொடுமை சட்டம் என்பது இன்னும் இங்கு முறையாக அமல்படுத்தப்படவேயில்லை, அதற்குள் அதனால் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டார் என்பது எவ்வகையில் நியாயம். தலித் வன்கொடுமை சட்டத்தின்படி சாதியை குறிப்பாலோ, சொல்லாலோ கூறி கேலி செய்வது தவறு. ஆனால் மகாபலிபுரம் பொதுகூட்டத்தில் "நான் என்ன மேளம்(பறை) அடிக்கிற சாதியா ?" எனக்கேட்ட காடுவெட்டி குருவின் மேல் வன்கொடுமை சட்டம் பாயவில்லையே? இது தான் இங்குள்ள யதார்த்தம், அதை விட்டு தலித் வன்கொடுமை சட்டம் என்னவோ தமிழகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் சரியாக காவல்துறையால் பயன்படுத்துவது போலவும், தலித்துகளின் மீதான வன்கொடுமை குறைந்துவிட்டது போலவும், இப்பொழுது தலித்துகள் இந்த வன்கொடுமை சட்டம் மூலமாக ஆதிக்கம் செய்வது போலவும் நீங்கள் சொல்வது நகைமுரணாக உள்ளது.

  அடுத்து நீங்க‌ள் சொல்வ‌து போல‌ பா.ம‌.க‌ தோன்றிய‌திலிருந்தே யாரும் அதை வ‌ன்னிய‌ர் க‌ட்சி என்று சொல்ல‌வில்லை, இன்றும் அக்க‌ட்சியை யாரும் வ‌ன்னிய‌ர் க‌ட்சி என்று சொல்ல‌வில்லையே பாட்டாளி ம‌க்க‌ள் க‌ட்சி என்று தானே சொல்லுகின்றார்க‌ள். அதும‌ட்டுமின்றி பா.ம‌.க‌ வ‌ன்னிய‌ர் க‌ட்சி என்ற‌ழைப்ப‌த‌ற்கு கூட‌ த‌குதிய‌ற்ற‌ க‌ட்சியாக‌த் தானே இன்றுள்ள‌து. வ‌ன்னிய‌ பெரும்பான்மை ம‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தை பாதிக்கும் க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ங்க‌ளில் உள்ள‌ வேதிய‌ல் தொழிற்சாலைக‌ளையோ, புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டு வ‌ரும் மின்சார‌ உற்ப‌த்தி நிலைய‌ங்க‌ளையோ, பெரிய‌ சாய‌ ப‌ட்ட‌றையையோ , கெயில் நிறுவ‌ன‌ எண்ணெய் குழாய்க‌ளை எதிர்த்தோ பா.ம‌.க‌ எதுவும் செய்ய‌வில்லையே? அவ‌ர்க‌ளின் நோக்க‌ம் தேர்த‌ல் மூல‌ம் ஓட்டு வாங்கி க‌ட்சியில் உள்ள‌வ‌ர்க‌ள் ந‌ல‌ன் பெறுவ‌து என்ற சுருங்கிய‌ நிலை தானே இன்று உள்ள‌து. தொட‌க்க‌த்தில் இட‌ஒதுக்கீட்டீற்காக‌ போராடிய‌ பா.ம‌.க‌ இல்லை இன்று இருக்கும் பா.ம‌.க‌ என்ப‌தை பெரும்பான்மை வ‌ன்னிய‌ ம‌க்க‌ள் புரிந்துகொண்டுள்ளார்க‌ள். அத‌னால் தான் அவ‌ர்க‌ளை அறிவு ரீதியாக‌ சிந்திக்க‌விடாம‌ல், உண்ர்வு ரீதியாக‌ தூண்டிவிடும் வேலையை இப்போது பார்த்து வ‌ருகின்ற‌து க‌ட்சி.


  மேலும் தலித் மட்டுமல்ல எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே, யாரும் தவறே செய்யாத புனிதர்கள் இல்லை. யாரு தவறு செய்கின்றார்களோ அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. நேற்று திவ்யாவின் தந்தை மரணத்திலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற குடிசை எரிப்பிலும், அவர்களின் காதலை பிரித்ததிலும், இன்று இளவரசன் மரணத்திற்கும் காரணமானவர்கள் பா.ம.கவே. இது போன்று வன்முறைகள் மூலம் தமிழகத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து செல்கின்றது பா.ம.க. அதுமட்டுமின்றி தலித்துகள் பெண்களை காதலித்து ஏமாற்றுகின்றார்கள், பணம் பறிக்கின்றார்கள் என்ற கூற்று அப்பட்டமான பொய் என்பதை எவிடென்ஸ் கதிர் தனது கட்டுரையில் தெளிவாக புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளார்,
  அதையும் கொஞ்சம் படியுங்கள்.

  http://keetru.com/index.php?option=com_content&view=article&id=23166

  ReplyDelete
 7. சேவ் தமிழ்சு இயக்கம் அவர்களே,
  // மகாபலிபுரம் பொதுகூட்டத்தில் "நான் என்ன மேளம் அடிக்கிற சாதியா ?" எனக்கேட்ட//

  எந்த அளவு நீங்கள் வன்னியர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளீர்கள் என்பதற்கு இதுவே சான்று. அவர் அன்று சொன்னது "சின்ன மேளம்"(இதுவே பின்னாளில் கருணாநிதி அவர்களின் சாதிப்பற்று காரணமாக இசை வேளாளர் என்று திருத்தப்பட்டது) என்ற கருணாநிதியின் சாதியை.

  தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னிய சமூகம் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வன்னியர் உரிமைகளை கேட்க பா.ம.க வை தவிர யாரும் இல்லை.

  இல்லையேல் நீங்கள் ஒன்று செய்யுங்கள் அரசிடம் பேசி வன்னிய மக்களுக்கு சமூக நீதி பிறளாமல் எல்லா இடங்களிலும் உரிமை பெற்று தாருங்கள். நாங்கள் பா.ம.க வை ஆதரிக்கவில்லை

  ReplyDelete
 8. தாயார் விரும்பினால் இளவரசனோடு வாழ விருப்பம் தெரிவித்த திவ்யா, எப்படி அடுத்த கட்ட விசாரணையில் பத்திரிக்கையாளர்கள் முன்பு தான் அப்படிச் சொல்லவேயில்லை என்று சொல்லியிருக்கிறார். அதற்கு பா.ம.கவின் அழுத்தமே காரணமாக இருக்கின்றது என தோழர் விடுதலை இராசேந்திரன் தெரிவித்தார்.
  ///

  அட புர்த்சி பைத்தியமே அந்த பெண் நான் சொல்லாத விசயத்தை இந்த ரஜினிகாந்த் வக்கீல் மீடியாவில் தவறாக சொல்லி எனக்கு யாரிடமும் ஆதரவு இல்லாமல் தனிமை படுத்திதான் அதரக்கத்தான் நான் இன்று மீடியாவில் அப்படி நான் நீதிமன்றத்தில் சொல்லவில்லை என்று பேட்டி கொடுக்க வேண்டிய சூழலை இந்த ரஜினி சார் தான் உருவாகிவிட்டார் என்று பேட்டி கொடுததை தேர்ந்தும் தெரியாதவன் போல பேசுவது என்ன நாயம் இங்க எங்க பா ம க மிரட்டியது ?? உங்க தலித்து அரசியலுக்கு வன்னியரும் பா ம க விமா கிடைத்தது வந்னியாய்ர்களை தலித்துகளின் எதரி போல உருவாக்குவதால் வன்னியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்ல ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட போகுர்டஹு ஏழை தலித்துகள் அதுவும் கிராம புற தலித்துகள் நீங்கள் நகரத்தில் பாதுகாட்பா உட்கார்ந்துகொண்டு நாயம் பேசிக்கிட்டு பணம் பல வகையில் நன்கொடை வாங்கி வாழ்க்கை ஒட்டிவிடுவீர்கள், ஆனால் தலித்துகளுக்கு வன்னியர்கள் வேலை கொடுக்கவில்லை என்றால் பஞ்சம்தான்

  ReplyDelete
 9. ஒரு நாடக காதல் என்று ராமதாஸ் பேசினார். ஆனால் தலித் இளைஞனான இளவரசன் உண்மையான காதலை தனது மரணத்தின் மூலம் நிரூபித்து விட்டான். எனவே யார் நாடக காதல் ஆடினார்கள் என்பது இப்போது அம்பலமாகி விட்டது.///

  இதில்தான் பெரிய மர்மம் இருக்கு இந்த காதலை உண்மை காதால் என்று சொல்லி பா ம க வை நாட்டில் தனிமை படுத்தனும் என்று திட்டம் போட்டு அவனை தற்கொலை அல்லது கொலை செய்ததே இந்த புரட்சி கூட்டமா இருக்குமோ என்ற பெருத்த சந்தேகம் பலரின் பரப்புரை கருத்துகளில் இருந்து சந்தேக பட வேண்டிய சூழலில் இருக்கு நடுநிளையார்களின் கையில் இந்த விசாரணை இருக்கணும்

  ReplyDelete
 10. எப்ப நீங்க காதலில் புரட்சி பேசி குடும்ப பிரட்சனைய பொது பிரச்சனையா மாற்றினீர்களே அப்பவே ஜாதி பற்று மற்றவர்களுக்கு அதிகமா மாற எதிர் வினை உங்காளால் உருவாக்கப்பட்டது என்பதை மறந்திடிங்க ?? அதிக ஜாதி உணர்வு பிற ஜாதி மக்களுக்கு உங்களின் நடுநிலை இல்லாத தலில்திய அரசியல் பரப்புரை வழியா எதிர்வினை உருவாக்கிவிட்டது நியூட்டன் மூன்றாவது விதி , இதுதான் விதி

  ReplyDelete
 11. நீங்கள் பேசும் பரப்புரை தலித்திய ஜாதிய பேச்சு ஒருநாளும் ஜாதி ஒழிக்கவோ அல்லது சமூகத்தில் இனக்கத்தை உருவாக்க போகுறது இல்லை என்பது உங்களுக்கே தெரியும் இதுபோல பரப்புரை இன்னும் ஜாதி வேற்றுமை உருவாக்க வேண்டும் அதன்மூலம் நாம் புரட்சி பேச வேண்டும் என்பதே உங்களில் இலக்கு

  ReplyDelete
 12. செல்வி, தனது உரையில் இளவரசனின் மரணத்திற்கு நீதிமன்றங்களும், நீதிபதிகளும் முக்கிய காரணமாக இருக்கின்றனர் என தெரிவித்தார். ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திவ்யாவிடம், இளவரசன் உங்களை துன்புறுத்தினாரா, அவரோடு இணைந்து வாழ விருப்பமா ? என்ற கேள்விகளை மட்டுமே கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முழுக்க, முழுக்க பா.ம.க நீதிபதிகளாகவே, இளவரசனையும் திவ்யாவையும் பிரிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே கேள்விகளை கேட்டனர். இளவரசனோடு வாழ்ந்து விட முடியுமென்று நம்புகிறாயா? அவரோடு உன்னால் இனியும் வாழ முடியுமா என்ற வரம்பு மீறிய கேள்விகளை கேட்டு திவ்யாவை நோகடித்திருக்கின்றனர். இந்த கேள்விகளை கேட்டவர் நீதிபதி கே.என்.பாட்சா.///

  இவர் முஸ்லிம் எப்படி பா ம க கட்சி அதுவும் உங்க பாசையில் ஆதிக்க சதி வெறி கட்சிக்கு சாதகமா இருப்பார் அப்ப யாரு இந்த சாணி வாஸ்

  ReplyDelete

 13. சக்தி அவர்களுக்கு,

  ///எந்த அளவு நீங்கள் வன்னியர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளீர்கள் என்பதற்கு இதுவே சான்று. அவர் அன்று சொன்னது "சின்ன மேளம்"(இதுவே பின்னாளில் கருணாநிதி அவர்களின் சாதிப்பற்று காரணமாக இசை வேளாளர் என்று திருத்தப்பட்டது) என்ற கருணாநிதியின் சாதியை.

  தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னிய சமூகம் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வன்னியர் உரிமைகளை கேட்க பா.ம.க வை தவிர யாரும் இல்லை.

  இல்லையேல் நீங்கள் ஒன்று செய்யுங்கள் அரசிடம் பேசி வன்னிய மக்களுக்கு சமூக நீதி பிறளாமல் எல்லா இடங்களிலும் உரிமை பெற்று தாருங்கள். நாங்கள் பா.ம.க வை ஆதரிக்கவில்லை////

  நீங்கள் சொல்வது போல எங்களுக்கு வன்னியர்களின் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. பா.ம.க-வின் சாதீய அரசியல் எதிர்ப்பு என்பதை வன்னிய எதிர்ப்பு என்று மடை மாற்ற வேண்டாம். மகாபலிபுரம் நிகழ்வின் காணொளி எங்களிடமும் உள்ளது, அதில் காடுவெட்டி குரு சின்ன மேளம் என்றும் சொல்லவில்லை, பெரிய மேளம் என்றும் சொல்லவில்லை. நான் என்ன மேளம் அடிக்கிற சாதியா என்று மட்டுமே சொன்னார், அதனால் அவர் சொன்னத்தை நீங்கள் திரிக்க முயலவேண்டாம்.

  அடுத்து வன்னிய மக்களின் உரிமைகளை கேட்க பா.ம.க மட்டுமே உள்ளது என்ற நீங்களே இதற்கு பதில் சொல்லலாமே ? அதும‌ட்டுமின்றி பா.ம‌.க‌ வ‌ன்னிய‌ர் க‌ட்சி என்ற‌ழைப்ப‌த‌ற்கு கூட‌ த‌குதிய‌ற்ற‌ க‌ட்சியாக‌த் தானே இன்றுள்ள‌து. வ‌ன்னிய‌ பெரும்பான்மை ம‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தை பாதிக்கும் க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ங்க‌ளில் உள்ள‌ வேதிய‌ல் தொழிற்சாலைக‌ளையோ, புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டு வ‌ரும் மின்சார‌ உற்ப‌த்தி நிலைய‌ங்க‌ளையோ, பெரிய‌ சாய‌ ப‌ட்ட‌றையையோ , கெயில் நிறுவ‌ன‌ எண்ணெய் குழாய்க‌ளை எதிர்த்தோ பா.ம‌.க‌ எதுவும் செய்ய‌வில்லையே? அவ‌ர்க‌ளின் நோக்க‌ம் தேர்த‌ல் மூல‌ம் ஓட்டு வாங்கி க‌ட்சியில் உள்ள‌வ‌ர்க‌ள் ந‌ல‌ன் பெறுவ‌து என்ற சுருங்கிய‌ நிலை தானே இன்று உள்ள‌து. தொட‌க்க‌த்தில் இட‌ஒதுக்கீட்டீற்காக‌ போராடிய‌ பா.ம‌.க‌ இல்லை இன்று இருக்கும் பா.ம‌.க‌ என்ப‌தை பெரும்பான்மை வ‌ன்னிய‌ ம‌க்க‌ள் புரிந்துகொண்டுள்ளார்க‌ள். அத‌னால் தான் அவ‌ர்க‌ளை அறிவு ரீதியாக‌ சிந்திக்க‌விடாம‌ல், உண்ர்வு ரீதியாக‌ தூண்டிவிடும் வேலையை இப்போது பார்த்து வ‌ருகின்ற‌து க‌ட்சி.

  ReplyDelete

 14. இராமையன் ,

  திவ்யா அப்படி சொல்லவேயில்லை என்று சொல்லாதீர்கள், முதல் நாள் அந்த பெண்ணின் பேட்டியில் "தாயார் விரும்பினால் இளவரசனோடு வாழ விருப்பம் தெரிவித்தார்" அடுத்த நாள் அதை அவரே மாற்றிக்கூறவைக்கப்பட்டார். செய்யாத கொலையை செய்ததாக ஒப்புக்கொள்ள வைக்க பிரயோகிக்கும் தந்திரங்கள், உளவியல் நெருக்கடிகள் என்ன என்பது எல்லாருக்கும் தெரியும்.

  அதுமட்டுமின்றி இங்கு யாரும் எல்லா வன்னியர்களையும் குற்றம் சாட்டவில்லை, அப்படி குற்றம் சாட்டப்படுவது போல் பா.ம.க கயிறு திரிக்கும் வேலைகளை பார்த்து அதை தனக்கு ஆதரவான ஓட்டாக மாற்ற அவர்கள் செய்யும் முயற்சி அதை புரிந்துகொள்ளுங்கள். அது மட்டுமின்றி //தலித்துகளுக்கு வன்னியர்கள் வேலை கொடுக்கவில்லை என்றால் பஞ்சம்தான்// இது போன்ற சாதி வெறி முத்துகளை உங்களுடனே வைத்து கொள்ளுங்கள்...

  //நடுநிளையார்களின் கையில் இந்த விசாரணை இருக்கணும் ///அதற்கு தான் இளவரசனனின் மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

  ///எப்ப நீங்க காதலில் புரட்சி பேசி குடும்ப பிரட்சனைய பொது பிரச்சனையா மாற்றினீர்களே அப்பவே ஜாதி பற்று மற்றவர்களுக்கு அதிகமா மாற எதிர் வினை உங்காளால் உருவாக்கப்பட்டது என்பதை மறந்திடிங்க ?? அதிக ஜாதி உணர்வு பிற ஜாதி மக்களுக்கு உங்களின் நடுநிலை இல்லாத தலில்திய அரசியல் பரப்புரை வழியா எதிர்வினை உருவாக்கிவிட்டது நியூட்டன் மூன்றாவது விதி , இதுதான் விதி /// நியூட்டனின் மூன்றாம் விதியை கூட தவறாக புரிந்து கொள்ள முடியும் என உங்களைப் போன்றோரைப் பார்த்தால் தான் புரிகின்றது. திவ்யா- இளவரசன் காதலை, நாகராஜை மர்மமான முறையில் மரணம் அடைய வைத்து, மூன்று கிராமங்களை எரித்து, இன்று அவர்களது காதலையும் பிரித்து, இன்று இளவரசனின் மரணத்தின் மூலம் முடித்து வைத்தது பா.ம.க தான் என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை. சாதி அரசியலையும், ஒரு சிலரின் சாதி ஆதிக்க‌ வெறியை ஒடுக்குவதன் மூலம் தான் சாதி உணர்வு வளர்கின்றது என்ற பொய்யை கூறி சாதியை ஆதரிக்க வேண்டாம்.

  //நீங்கள் பேசும் பரப்புரை தலித்திய ஜாதிய பேச்சு ஒருநாளும் ஜாதி ஒழிக்கவோ அல்லது சமூகத்தில் இனக்கத்தை உருவாக்க போகுறது இல்லை என்பது உங்களுக்கே தெரியும் இதுபோல பரப்புரை இன்னும் ஜாதி வேற்றுமை உருவாக்க வேண்டும் அதன்மூலம் நாம் புரட்சி பேச வேண்டும் என்பதே உங்களில் இலக்கு /// நாங்க‌ள் பேசுவ‌தை த‌லித்திய‌ சாதிய‌ பேச்சு என்ப‌த‌ன் மூல‌ம் உங்க‌ள் சாதிய‌ ஆதிக்க‌ உண‌ர்வை வெளிக்காட்டிவிட்டீர்க‌ள், மேலும் ச‌மூக‌த்தில் ந‌ல்லிண‌க்க‌த்தை உருவாக்க‌ ஒடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளின் வ‌லியை உண‌ர்ந்து அவ‌ர்க‌ளுக்காக‌ நீதிக்காக‌ போராடுவ‌து தான் ச‌ரியான‌ வ‌ழியே அன்றி, ஒடுக்குப‌வ‌னுக்கு ஆத‌ர‌வாக‌ பேசுவ‌து அல்ல‌...


  //இவர் முஸ்லிம் எப்படி பா ம க கட்சி அதுவும் உங்க பாசையில் ஆதிக்க சதி வெறி கட்சிக்கு சாதகமா இருப்பார் அப்ப யாரு இந்த சாணி வாஸ் ///

  தோழ‌ர்.செல்வி குறிப்பிடுவ‌து அதிகார‌த்தில் உள்ள‌ நீதிப‌திக‌ள் எப்ப‌டி செய‌ல்ப‌டுகின்றார்க‌ள் என்று, அங்கும் சென்று அவ‌ர் என்ன‌ ம‌த‌ம் என்று ஆராய்வதும், அதன் மூலம் கலகத்தை ஏற்படுத்துவதும் தான் நீங்கள் கூறும் நல்லிணக்கமோ? அதுமட்டுமின்றி தோழர். ஷானவசை நீங்கள் கொச்சைப்படுத்தும் விதமே உங்களின் சாதி ஆதிக்க வெறியை காட்டுகின்றது.

  நாங்கள் பொதுவானவர்கள், நடுநிலையாளர்கள் என உங்களைப் போன்றோர் எத்தனை முகமூடி அணிந்து வந்தாலும், இறுதியில் உங்களின் முகமூடிகள் கிழிந்து உங்களது வார்த்தைகளினாலேயே நீங்கள் அம்பலப்பட்டு நிற்கின்றீர்கள்...

  ReplyDelete
 15. //திவ்யா அப்படி சொல்லவேயில்லை என்று சொல்லாதீர்கள், முதல் நாள் அந்த பெண்ணின் பேட்டியில் "தாயார் விரும்பினால் இளவரசனோடு வாழ விருப்பம் தெரிவித்தார்" //

  இது மிகத்தவறான தகவல். நீங்கள் குறிப்பிடுகிற முதல்நாள் - 1.7.2013 - திவ்யா பேட்டி எதுவும் அளிக்கவில்லை.

  ReplyDelete

 16. இணையத்தில் தேடினாலே இந்த செய்தி கிடைக்கிறதே அருள்... இன்னும் செய்தி ஊடகங்களில் தேடினால் கானொளியும் கிடைக்கும்

  http://tamil.oneindia.in/news/2013/07/02/tamilnadu-dharmapuri-divya-willing-rejoin-her-hubby-178250.html

  ReplyDelete