Showing posts with label பதில். Show all posts
Showing posts with label பதில். Show all posts

Thursday, November 19, 2009

ஓர் பதிவருக்கு நமது பதில்...

நம்மைப் பற்றி ஓர் வலைப்பூவில் இவ்வாறாக குறிப்பிடப்பட்டிருந்தது...

" அந்த மௌன ஊர்வலத்திலும், கஸ்பரின் இன்னபிற கூட்டங்களிலும் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களில் அதிகபட்சம் பேர் ஐ.டி. இளைஞர்கள்தான். மாநிலம் முழுவதும் ஒருவித கொந்தளிப்பான சூழல் நிலவிய அக்காலக் கட்டத்தில் ஐ.டி. இளைஞர்களும் குற்றவுணர்வு காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். கேள்வியில்லாமல் திடீர் திடீரென வேலையை விட்டுத் தூக்கப்படும் தங்களின் சொந்த பிரச்னைக்காகக் கூட போராட வீதிக்கு வராத அவர்கள், ஈழத்தில் நடந்த மக்கள் படுகொலைகளைப் பொறுக்க முடியாமல் முதல் முறையாகப் போராடத் துணிந்தார்கள். ஆனால் அவர்களது அரசியல் குறைபாடு காரணமாக போராட்டத்தின் வடிவங்களும், தன்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த இளைஞர்களை வாகாக கையில் எடுத்தார் கஸ்பர். ‘துப்பாக்கிகளுக்கு இதயமில்லை - உங்களுக்கு’, ‘ஈழம் - கண்ணீர் தேசம்’ என்பது மாதிரியான அரசியலற்ற/ மய்யப்படுத்தப்பட்ட மனிதாபிமான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அந்த இளைஞர்களுக்கு அணியத்தந்து ஒரு டி-சர்ட் புரட்சி நடத்தினார். ‘ஏதாச்சும் செய்யனும் பாஸ்’ என்று வந்த இளைஞர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ‘நாமும் போராடிவிட்டோம்’ என்ற திருப்தி அவர்களுக்கும், ‘எப்பூடி அடக்குனோம்?’ என்ற வெற்றிக் களிப்பு கஸ்பருக்கும் கிடைத்தது. (போராட வந்த ஐ.டி. இளைஞர்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அதன் பிறகும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிலரை எனக்குத் தெரியும். ஆனால் பெரும்பகுதியானவர்கள் அத்தோடு திருப்தியடைந்து ஒதுங்கிக்கொண்டார்கள்)."
இதற்கு "சேவ் தமிழ்" சார்பாக கீழ் வருமாறு நம் நிலையை தெளிவுப்படுத்தியுள்ளோம்....
வணக்கம்,

IT இளைஞர்கள் சார்பாக எங்கள் பதிலை பதிவு செய்யலாம் என்று நினைக்கிறோம்.

இது வரை IT துறையினர் சார்பாக நடத்தப் பட்ட ( உண்ணாவிரதம், நீதி வேண்டி பேரணி, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் - கருத்தரங்கம், திசநாயகம் கைதுக்கு எதிராக பத்திரிகையாளர் கண்டன ஆர்ப்பாட்டம்) எந்த ஒரு நிகழ்வும் யாருடைய வழிகாட்டுதலின் பெயரிலும் நடத்தப் பட வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வுகளில் பங்கு கொள்ளவும் உரையாற்றவும் அரசியல் தவிர்த்து அனைத்து தரப்பிலிருந்தும் முக்கியமானவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.எங்கள் நிகழ்ச்சிகளில் விடுதலை ராசேந்திரன், தியாகு போன்றவர்களையும் அழைத்திருக்கிறோம்.

வேறு எந்த ஒரு அமைப்பும் ஈழம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால், அதில் பங்கு கொள்ள முயற்சித்திருக்கிறோம்.

உதாரணமாக..

தேர்தல் சமயத்தில் சிதம்பரத்திற்கு எதிரான பரப்புரை

நாம் அமைப்பின் அமைதி பேரணி

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

மாணவர்கள் மாநாடு - முத்துக்குமார் எழுச்சிப் பாசாறை

தமிழின பாதுகாப்பு மாநாடு

'The Hindu' விற்கு எதிராக கண்டன கூட்டம்.

T- Shirt விசயத்திலும் தவறான தகவலே உங்களுக்கு கிடைத்திருக்கிறது. டி-சர்ட் வெளியிட்ட போது ஜெகத் கஸ்பருடன் எங்களுக்கு அறிமுகமே கிடையாது.

எங்கள் பதிலை உங்கள் பதிவில் சேர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்

நன்றி

Save-Tamils