Thursday, February 18, 2010

முத்துக்குமாரின் தியாகம் வீண் போகாதிருக்க தமிழக இளைஞர்களே விழித்து எழுவீர்.

தமிழ் இன அழிப்புப் போரை சிங்கள இனவாத இலங்கை அரசு நடத்திக் கொண்டிருந்தது. போர் என்றால் சாதாரண போர் அல்ல போர் நெறிமுறைகளை எல்லாம் மீறி உலகத்தால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஈழ தமிழ் மக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருந்தது. இனவெறி பிடித்த சிங்கள இராணுவம் அத்தகைய கொடுமையான போர் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படுவதைக் கண்டு கொதிப்படையாமலும் போரை தடுத்து நிறுத்திட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமலும் முடங்கிக்கிடந்த தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு விழிப்புணர்வூட்ட விரும்பினான் முத்துக்குமரன். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முத்துக்குமரன் தீக்குளித்து தன்னுயிர் ஈந்தான். முத்துக்குமரன் தீக்குளித்த்தைக் கண்டவுடன் தமிழகமே கொந்தளித்து எழுந்தது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமா? உலகெங்கும் உள்ள தமிழர்கள் எல்லாம் விழித்துக்கொண்டனர். வீறுகொண்டு எழுந்தனர். முத்துக்குமரனின் தியாகம் வீண் போகவில்லை. அவன் எதிர்பார்த்தது நடந்தது.

• இலங்கை அரசே! தமிழின அழிப்புப்போரை உடனே நிறுத்து.
• இந்திய அரசே! சிங்கள இனவாத இலங்கை அரசு நடத்திக்கொண்டிருக்கும் தமிழின அழிப்புப்போரில் தலையிட்டு தமிழின அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து.
• உலக நாடுகளே! சிஙகள் இனவாத இலங்கை அரசு நடத்திக்கொண்டிருக்கும் தமிழின அழிப்புப்போரில் தலையிட்டு ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுஙகள்.

இவ்வாறான முழக்கங்கள் உலகத் தமிழர்களால் முழங்கப்பட்டு உலகெங்கணும் எதிரொலித்தது. போரை இடைநிறுத்தக்கோரி பல்வேறு நாடுகளிலும் பல்வேறு கட்டங்களாகப் பல வகையான போராட்டங்கள் உலகத் தமிழர்களால் நடத்தப்பட்டது. போராட்டங்களின் விளைவாக உலக மக்களின் கவனமெல்லாம் ஈழத்தமிழர்களின் பால் திரும்பியது.
தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்ததால் மத்திய அரசின் கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பும். தமிழர்களின் குரலுக்கு மத்திய அரசு செவிமடுக்கும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்திய அரசு இலங்கை போரில் தலையிட்டு போர் தொடர்வதை தடுத்து நிறுத்திவிடும் என தமிழ்நாட்டு மக்கள் வெகுவாக நம்பினார்கள். இந்திய அரசு நினைத்திருந்தால் போர் இடையிலேயே நிறுத்தப்பட்டிருக்கும். இந்திய அரசு அதை செய்யவில்லை. போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்து இறுதிக் கட்ட அழிவுவரை நடந்தேறியது. ஈழத் தமிழர்கள் பேரழிவைச் சந்தித்த்து, ஈழத் தமிழர்களுக்கு ஒரே தீர்வு தனித்தமிழீழம் தான் என்ற முழக்கம் அடங்கும்வை, அடக்கப்படும்வரை போர் இறுதி வரை நீடித்தது என்பது பெரும் கொடுமை எல்லாம் முடிந்து போனது போர் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களுக்கும், உலகத் தமிழர்கள் நடத்திய போராட்டங்களுக்கும் எவ்வித பலனும் கிடைக்காம்ல் வீணானது, வேத்னையானது.

தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்தால் அது கண்டு மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்திவிடும் என்று தமிழக மக்கள் நம்பினார்களே, அவ்வாறு நடை பெறவில்லையே ஏன்? இந்திய அரசு தலையிட்டு போரை நிறுத்தவில்லை என்பது மட்டுமின்றி ஈழத்தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் சிங்கள இனவாத இலங்கை அரசின் இன அழிப்புப் போருக்கு துணையும் அல்லவா போனது. இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கியது, ஆலோசகர்களை அனுப்பியது என துணைபோனது மட்டுமில்லாமல் மொத்தத்தில் இன அழிப்புப் போரை வழிநடத்தியது இந்திய அரசு தான் என்றால் அது மிகையல்ல.

தமிழ்நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசால் இருக்க முடிந்த்து எப்படி? தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசால் இருக்க முடிந்ததே எப்படி?

தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களைக் கண்டு கலக்கமடையாமல் மத்திய அரசால் இருக்க முடிந்தது எப்படி?

தமிழ்நாட்டில் மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கண்டு கலக்கமடையாமல் மத்திய அரசால் இருக்க முடிந்தது எப்படி?

தமிழ்நாட்டில் மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கண்டு அச்சப்படாமல் மத்திய அரசால் இருக்க முடிந்த்து எப்படி?

தமிழ்நாட்டு மக்களைக் கண்டு பயந்து நடுநடுங்காமல் மத்திய அரசால் இருக்க முடிந்தது எப்படி?

தமிழ்நாட்டில் மக்கள் போராட்டங்கள் நடந்த்தாக்க் காட்டிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்திவிட்டு அலட்டிக்கொள்ளாமல் இந்திய அரசு எந்த தைரியத்தில் இந்திய அரசு இன அழிப்புப்போருக்கு துணை போனது?


தமிழக தலைவர்களின் கடந்த கால வரலாற்றிலிருந்து ஒரு மதிப்பீட்டை இந்திய அரசு வைத்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் எவ்வளவு காலம் தான் போராடினாலும் எப்படிதான் போராடினாலும் தமிழகத் தலைவர்களோ மக்களின் போராட்டஙக்ளை மழுங்கடித்து, பிசுபிசுக்கவைத்து நீர்த்துப்போக செய்துவிடுவார்கள். தமிழக தலைவர்க்ள் பற்றிய இந்திய அரசின் மதிப்பீடு இவ்வாறாகத் தான் உள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மக்கள் நடத்தும் போராட்டங்களே தமிழக தலைவர்களே பார்த்துக்கொள்வார்கள். அது பற்றி நாம் கவலைப்பட எதுவுமில்லை. இந்திய அரசு கருதியது அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் போரைத் தடுத்து நிறுத்தக்கோரி நடத்தப்பட்ட மக்களின் போராட்டங்களே கண்டுக்கொள்ளாது இந்திய அரசு. இலங்கை அரசுக்கு உதவியது மத்திய அரசின் கனிப்புக்கு ஏற்பவே தமிழகத் தலைவர்கள் நடந்துக்கொண்டார்கள்.

முத்துக்குமாரின் தீக்குளிப்பினை தொடர்ந்து தமிழ்நாட்டு தமிழர்கள் விழிப்படைந்து இலங்கை அரசின் இன அழிப்புப் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்திடவேண்டுமென கோரி போராட்டங்களை நட்த்த தொடங்கிவிட்டனர். தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைக் கண்டவுடன் தமிழகத் தலைவர்கள் எங்கே நமது தலைமைகள் பறிபோய் விடுமோ என்று அஞ்சி அலறியடித்துக்கொண்டு ஒருவருடன் ஒருவர் போட்டிப்போட்டுக்கொண்டு போராட்டங்களுக்கு தலைமையேற்க ஓடோடி வந்தனர். அவ்விதம் வந்த தலைவர்களை அப்பாவி மக்களும் நம்பிவிட்டனர். ஆனால் த்லைவர்களோ போராட்டங்களின் தன்மையையே மாற்றி போராட்ட குணத்தை மழுங்கடித்து, போராட்டங்களை பிசுபிசுக்க வைத்து போராட்டங்களின் விளைவை நீர்த்து போக செய்துவிட்டனர். இந்திய அரசுக்கு சாதகமான் நிலையை ஏற்படுத்துவிட்டனர். அவ்வாறாக செயல்பட்ட்தில் தமிழக் ஆளுங்கட்சியின் தலைவர்கள் உட்பட எதிர் கட்சியின் தலைவர்கள் வரை பெரிய கட்சியின் தலைவர்கள் முதல் சிறிய கட்சியின் தலைவர்கள் வரை பல தலைவர்களும் உண்டு. இன அழிப்பு போர் இடையில் தடுத்து நிறுத்தப்படாததால் இறுதிவரை ஈழத்தமிழர்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்து உள்ளது. இந்த நிலையில் சிலர் கூறுகின்றனர் கருணாநிதி போரைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை நிர்பந்திக்காமல் தமது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே கவனமாக இருந்துவிட்டார். அவ்வகையில் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். தமிழினத்திற்கு துரோகியாகிவிட்டனர் என கூறுகின்றனர். கருணாநிதி இப்போதுதான் தமிழின துரோகி ஆகிவிட்டார் என்பதில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக தமிழின துரோகியாகவே இருந்து வந்துள்ளார். இவ்வளவு காலமும் சாமர்த்தியமாக் மூடி மறைத்து தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளார். இவ்வளவு காலமும் சாமர்த்தியமாக மூடி மறைத்து தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளார். இப்போதுதான் மூடி மறைக்க முடியாது போய் அம்பலப்பட்டுள்ளார்.

கருணாநிதி தமிழின துரோகிதான் சரி. ஆனால், கருணாநிதியை துரோகி என கூறும் இவர்கள் என்ன செய்தார்கள்? கருணாநிதி செய்யாததை, செய்ய தவறியதை, செய்ய வேண்டியதை, மற்றவர்கள் செய்தார்களா? இல்லையே கருணாநிதி சொன்னதைபோல் எனது ஆட்சியை கலைக்க செய்துவிட்டு அவர்கள் ஆட்சியை பிடிக்க எத்தனிக்கிறார்கள் என்றாறே அது போலதான் எதிர் கட்சி ஜெயலலிதாவும் அவரது கூட்டணிக்கட்சி தலைவர்களும் செயல்பட்டுள்ளனர். பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும், பதவியைப் பிடிப்பதற்காகவும், தமிழினத்திற்கு துரோகம் இழைக்கலாம் தவறில்லை என்றல்லவா ஆளுங்கட்சி தலைவர்களும், எதிர் கட்சியின் தலைவர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த தலைவர்கள்தான் அப்படி என்றால் நூற்றுக்கணக்கில் இருக்கும் சிறுசிறு இயக்கங்களின் தலைவர்கள்தான் புதியதாய் என்ன செய்துவிட்டார்கள்?

ஒன்றுமில்லையே நாமே அடிமைகள் நம்மால் எப்படி இன்னொரு அடிமைக்கு உதவிட முடியும் என்று பெரியார் எப்போதோ சொன்ன ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு நம்மால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று தானே அனைத்து தலைவர்களும் செயலாற்றுகின்றார்கள். நாமே அடிமைகள் என்பது உண்மைதான். நமது அடிமை நிலை நீடிக்கும்வரை நம்மால் சரியாக ஈழத்தமிழர்களுக்கு உதவிட முடியாது என்பதும் உண்மைதான். அதற்காக சும்மா இருந்துவிடலாமா? நமது அடிமை நிலை ஒழிய வழி என்ன? ஈழத்தமிழர்களுக்கு உதவிட நமக்குள்ள வழி என்ன? என்பதைக் கண்டறிய வேண்டாமா? மாற்று வழியைக் கண்டறிய வேண்டாமா? மாற்று வழியைக் கண்டறியாமல் இதற்கு மேல் என்ன நம்மால் என்ன செய்ய முடியும்? என்று ஒதுங்கி போவது ஒளிந்துக்கொள்வது, கோழைத்தனமல்லவா?

முத்துக்குமரா ஈழத்தின் கதி இவ்வாறு முடிந்திட தமிழக தலைவர்கலே காரணம் என்பதை நீ முன் கூட்டியே உணர்ந்திருப்பாயேயானால் தீக்குளிப்பு போராட்டத்திற்கு பதிலாக மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருப்பாயே. ஆம் நிச்சயமாக முத்துக்குமாரின் கனவை நினைவாக்கிட தமிழ் ஈழம் மலர தமிழ்நாட்டு மக்கள் துணை நிற்க எதிர்கால தமிழ் இளைஞர்கள் மாற்று வழியைத் தமிழகத்தை மாற்றும் வழியை தலைகீழாக மாற்றிவிடும் வழியையே தேர்ந்தெடுப்பார்கள்.

முத்துக்குமார் உன் தியாகம் வீண் போகாது தமிழ் ஈழம் அமைந்திட போராட போகும் ஈழத்தமிழர்களுக்கு துணையாக தமிழ்நாட்டு மக்கள் இருப்பார்கள் நிச்சயமாக முத்துக்குமாரா தமிழ் இனம் உள்ளவரை உன் நினைவு நிலைத்து நிற்கும்.

முத்துக்குமாரின் புகழ் நீடுழி வாழ்க்.
செந்தமிழகம் படிப்பு வட்டம்

No comments:

Post a Comment