Sunday, February 10, 2013

தெலுங்கானா ‍ வரலாற்றுத் தேவை: அரங்கக் கூட்டம்



கடந்த சனவரி 26 சனிக்கிழமை அன்று சென்னை லயோலா கல்லூரியில்

சேவ் தமிழ்சு தோழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட "தெலுங்கானா வரலாற்றுத் தேவை" குறித்த கூட்டத்தில் எடுத்தாளப்பட்ட கருத்துரைகள், காணொளிகள், மற்றும் புகைப்படங்கள்.






தோழர் சுரேசு உரை:‍


ஆந்திர மக்கள் சிவில் உரிமை கழகத்தில் தலைவர், தோழர். சுரேசு அவர்கள் தெலங்கானா மாநிலம் ஏன் இப்பொழுது உருவாக்கப்படவேண்டும், அதற்கான வரலாற்று தேவை என்ன என்பதை பற்றி பேசினார். தோழர்.சுரேசு அவர்கள் தெலங்கானா பகுதியைச் சேராத நெல்லூரில் (ஆந்திர மாநிலம்) பிறந்து வளர்ந்தவர். தெலங்கானா பகுதி தவிர்த்த ஆந்திராவில் மக்கள் இயக்கங்களை உங்களால் பார்க்க முடியாது என அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் "இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் அதனுடன் சேராத மூன்று மன்னராட்சி பகுதிகளில் இன்றைய தெலங்கானா பகுதியும் ஒன்று, அன்று அது ஹைதராபாத் மாநிலம் என்றைழைக்கப்பட்டது. இந்தியாவுடன் இணையாத மற்ற பகுதிகள் காசுமீர், பரோடா சமஸ்தானமாகும். மேலும் ஆந்திர மாநிலம் கூட 1956ல் தான் உருவாக்கப்பட்டது. அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்து எட்டு ஆண்டுகள் தெலங்கானா தனி மாநிலமாகத்தான் இருந்தது. இந்த தனி மாநிலத்தை தான் அவர்கள் கேட்கின்றார்களே தவிர புதிதாக ஒரு மாநிலத்தை அவர்கள் உருவாக்கச்சொல்ல வில்லை என தெலங்கானாவின் வரலாற்றை விரிவாக‌க்கூறினார். தெலங்கானா இயக்கம் ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று சொல்கின்றார்களே என்ற கேள்விக்கு அவர் "ஆந்திர மாநிலம் கூட சென்னை மாகாணத்தை பிரித்து தான் உருவாக்கப்பட்டது. அப்படியானால் ஆந்திர மாநில உருவாக்கத்திற்கு போராடியவர்கள் எல்லாம் பிரிவினைவாதிகளா? என்றால் இல்லை, அப்படியானால் எப்படி தெலங்கானா கோரிக்கை மட்டும் எப்படி பிரிவினைவாதக் கோரிக்கையாகும்" என கேட்டார். "தெலங்கானா பகுதி எப்பொழுதும், எல்லாவற்றிலும் உரிய பங்கு கிடைக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. வேலையானாலும் சரி, விவசாயமானாலும் சரி, அரசியலானாலும் சரி புறக்கணிப்பே தெலங்கானாவின் வரலாறு, இதனால் 1969ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உருவான தனி மாநில கோரிக்கைக்கான மக்கள் இயக்கம், தெலங்கானா பகுதியின் மூலை, முடுக்கெங்கும் பரவியது. மேலும் இன்று வரை இவ்வியக்கம் மக்கள் கையில் தான் உள்ளதேயன்றி அரசியல்வாதிகள் கைகளிலல்ல..என்று தெலங்கானா கோரிக்கை எவ்வாறு உருவாகியது என விளக்கினார். மேலும் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டதன் பின்னால் உள்ள அரசியலைப் பற்றி பேசும் பொழுது, அவர் பின்வருமாறு கூறினார். அதாவது ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்ட போது நேரு பின்வருமாறு கூறினார் "தெலங்கானா மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தால் எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர்கள் ஆந்திராவிடமிருந்து பிரிந்து தனிமாநிலமாகலாம் என்றார்". மேலும் அரசியலமைப்பை எழுதிய அம்பேத்கர், பிரிவு 3ல் எந்த ஒரு பகுதியாவது தாங்கள் தற்பொழுது இருக்கும் மாநில அரசில் இருந்து பிரிய வேண்டுமென்றால் பிரிந்து தனி மாநிலமாக மாறலாம், மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை போடுவதன் மூலம் இதை செய்ய முடியும் என எழுதினார். இந்த அடிப்படையிலேயே சட்டீசுகர், உத்தராஞ்சல், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் எல்லாம் இந்த வழியிலேயே உருவாக்கப்பட்டன. ஆனால் தெலங்கானா தனி மாநில கோரிக்கையை தள்ளிப்போட வேண்டும் என்ற நோக்கிலேயே இங்கு மட்டும் "மாநில சீரமைப்பு ஆணையத்தை" மத்திய அரசு உருவாக்கியது என அவர் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.





தோழர்.சீதாராமலு உரை:‍

 "ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டுணர்வின் வெளிப்பாடே தெலங்கானா கோரிக்கையாகும், இந்த கோரிக்கைக்கு கிடைத்தது போல‌ பல கட்சி ஆதரவு வேறு எந்த கோரிக்கைக்கும் கிடைத்தது இல்லை. இவையெல்லாம் இருந்தாலும் உயர் வகுப்பினரின் நிர்பந்தத்தினாலும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளினாலும், காங்கிரசு தலைமையிலான மத்திய அரசினாலும், ஹைதராபாத்தில் உள்ள தங்கள் அரசியல், பொருளாதார காரணிகளினால் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருக்கும் தெலங்கானா அரசியல்வாதிகளினாலும், மக்களின் உளவேட்கையை சரியாக பிரதிபலிக்கத் தெரியாத தெலங்கானா அரசியல்வாதிகளினாலும், நேரு காலத்திலிருந்து இன்றுவரை வெறும் வாக்குறுதிகளை கூறி தெலங்கானா மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் காங்கிரசு கட்சியினாலும் தான் தெலங்கானா உருவாக்கும் தாமதமாகி வருகின்றது என்று தோழர்.சீதாராமலு கூறினார்". தற்பொழுது உள்ள அரசுகள் நடைமுறைப்படுத்தும் முதலாளித்துவ, தனியார்மய நிலையைப் பற்றி அவர் கூறுகையில் "இன்றைய உலகமய காலத்தில் மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை, அவர்கள் சிந்திப்பதெல்லாம் முதலாளிகளைப் பற்றி மட்டுமே" என கூறினார், மேலும் இறுதியாக அவர் கூறும் பொழுது "ஒரு இயக்கம் 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டால், அது அதன் இலக்கை எட்டிவிடும், அது போலவே தெலங்கானா இயக்கமும் உலகமயத்தையும், சனநாயகத்திற்கு எதிரான ஆற்றல்களையும் வென்று அதன் இறுதி இலக்கை அடையும்" என்றார். மேலும் அவர் பாராளுமன்ற உறுப்பினரான திரு.தொல் திருமாவளவனிடம் நீங்கள் இந்த பிரச்சனையை பாராமன்றத்திலும் விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தோழர் தியாகு உரை:

தெலுங்கானா ஒரு வரலாற்றுத் தேவை historic necessity என்பதை விட historical necessity என்பதே சரியாக இருக்கும்.காரணம் என்பது போராட்டங்களில இறுதிக்கட்டம் என்றஒன்று இல்லை. வரலாறு என்பதற்கு வந்த வழி என்று பொருள்.தனி தெலுங்கானா கிடைத்து விட்டாலும் கூட இந்த போராட்டம் நின்று விடப் போவதில்லை.தனிதெலுங்கானா அமைந்து விடுவதானால் உழவர்களுக்கு நிலம் கிடைத்து விடுமா? சமூகவிடுதலை கிடைத்து விடுமா ? அனைவருக்கும் கல்வி கிடைத்து விடுமா ? அடிப்படைதேவைகள் கிடைத்து விடுமா?.போராட்டம் என்பது ஒரு ஆறு போல. வளைந்து நெளிந்து பள்ளம் மேடுகளைக் கடந்து கரைகள் தொட்டுவந்து சேரக்கூடியவை. இப்போராட்டங்களை அதன் அரசியல் பொருளியல் பண்பாட்டுக்கூறுகளோடு புரிந்து கொள்ள வேண்டும். சமூக சனநாயக விடுதலைகக்கான ஒரு நீண்ட நெடிய போராட்டத்தில் தனி தெலுங்கானா போராட்டம் என்பது ஒரு கட்டம்,இதைக் கடக்காமல் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க முடியாது.



நிசாம் மன்னனுக்கு எதிரான தெலுங்கானா போராட்டம் இன்று இந்திய தேசிய வல்லாதிக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டமாக வளர்ந்த்துள்ளது. ஆனால்இத்தெலுங்கானா போராட்டம் ஒரு தெலுங்கு தேசிய இனப்போராட்டமாக பரிணமிக்கவில்லை.நிலத்தையும் ஆறுகளையும் மலையையும் காக்கும் ஒரு போராட்டமாகவே அமைந்திருந்தது.இப்புரிதல் அங்கிருந்து கம்யூனிஸ்டுகளுக்கு அப்போதுஇல்லை.அங்கே இருந்த முற்போக்கு தேய்ந்து தேய்ந்து ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.ஒருகட்டத்தில் விசாலாந்திரா என்பது மொழிவழியில் அமைந்ததே தவிர அங்கே மக்களாட்சி அமையவில்லை. தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பலர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. சுந்தரய்யாவிலுருந்து ஆரம்பித்து பலர்ஆந்திர பகுதியைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.ஏறத்தாழ நமது ஈழப்போராட்ட வரலாற்றில் நமக்கு சிங்களவர்களால் ஏற்பட்ட வஞ்சகம் துரோகம் சூழ்ச்சி என எல்லாவற்றிற்கும் இணையான ஒரு வரலாறு தெலுங்கானா போராட்டத்திற்கு இருக்கிறது.மோசடிக்கு பெயர் பெற்ற நேரு குடும்பத்தால் முழுதும் வஞ்சிக்கப்பட்ட ஒரு போராட்டமாக இது இருக்கிறது..

வீட்டை நாட்டுக்கு கொடுத்து நாட்டை வீட்டுக்கு எடுத்துக் கொண்ட ஒரு குடும்பம் நேரு குடும்பம்நமது ஈழப்போராட்டத்திற்காக 17 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.தெலுங்கானா போராட்டத்திலும் வீரம்மிக்க இளைஞர்கள்  பலர் தீக்குளித்திருக்கிறார்கள்ஈழப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில், தமிழர்களுக்கு ஆதரவாக மற்ற மாநிலங்களில் ஒரு குரல் கூட எழவில்லை என நாம் வருத்தப்பட்டது உண்டு. அதே சமயம், நாம் மற்ற மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்ட்டத்திற்கு ஆதரவளித்ததுண்டா என்பதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டும். 2009ம் ஆண்டு முதல் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழர் பாதுகாப்பு (சேவ் தமிழ்சு) இயக்கம், ஈழப்போராட்டம் பற்றி பேச ஹைதராபாத் சென்றார்கள்அவர்களோடு நானும்சென்றிருந்தேன்ஆந்திரத் தோழர்களோடு அப்போது ஏற்பட்ட ஒரு நட்பு தான் அவர்களை தெலுங்கானா பற்றி பேச வைத்திருக்கிறது.

இதோடு நின்று விடாமல்தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் குறித்து கல்வியைப் பரப்புவோம்மக்கள் அமைப்பாகத் திரள்வோம்நமது உடன்பிறந்த சகோதர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

காணொளியின் சுட்டி:‍


தோழர் தொல்.திருமாவளவன் உரை:-

இது ஒரு நல்ல முயற்சிபாராட்டுதலுக்குரிய முயற்சிஇந்த அரசியல் உறவு போராட்டக்களத்திலும் மலர வேண்டும்தமிழர்களுக்கு தமிழர்கள் தான் போராட வேண்டும்.தெலுங்கர்களுக்கு தெலுங்கர்கள் தான் போராட வேண்டும் என்ற ஒரு பார்வைமக்களிடத்திலே இருக்கிறதுஅவ்வகையில் இப்போராட்டத்தை ஒழுங்கு செய்த சேவ்தமிழ்சு இயக்கத்திற்கு என் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த போதுமனித நேயத்தின் அடிப்படையிலாவதுஅதை தடுத்து நிறுத்த ஆதரவு திரட்ட எண்ணினோம்கொள்கை அடிப்படையில் கூட கேட்கவில்லைஆனால் நாடாளுமன்றத்தில் ஈழப்பிரச்சினையா அதை தமிழன் தான் பேசவேண்டும்மற்ற வட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப் பற்றி மனித நேயஅடிப்படையில்  கூட பேசவில்லைமனிதம் என்ன செத்துப் போய்விட்டதா ?

இங்கே ஜெய் தெலுங்கானா என்று இத்தோழர்கள் முழங்கிய போது எனக்கும் ஜெய்தெலுங்கானா என்று உரத்துக் கூற வேண்டும் என்ற உணர்வு வந்ததுதெலுங்கானாபோராட்டத்தில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு இருக்கிறதுஏனெனில்மாணவப்பருவத்திலிருந்து இப்போராட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்பலகூட்டங்களில் இது குறித்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

ஆகவே இக்கூட்டம் குறித்துசேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் என்னை அணுகிய போது,எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்தேன்தனி நாடுக்கானகோரிக்கையையே ஆதரிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு தனி மாநிலமென்ன ? தமிழீழம்வேண்டி போராடிக்கொண்டிருப்பவர்கள் தனி தெலுங்கானா கோருவதில் ஏன் மறுப்புஇருக்கப்போகிறதுதெலுங்கானா தனிநாடு கோரிக்கை அல்லஅவர்கள் இந்தியஅரசியலமைப்பு சட்ட விதிகளுக்குட்பட்டுதனி மாநில இறையாண்மைக்காக தான்போராடுகிறார்கள்ஆகவே இப்போராட்டம் சட்ட விரோதமல்லஆனால் இங்கிருக்கும்ஆட்சியாளர்களுக்கு இதில் தயக்கம் ஏன் ?
இப்போராட்டத்திற்கான எதிர்ப்பும் ஆதரவும் எந்த தளத்திலிருந்து வருகிறது என பார்த்தால்,உயர்சாதி இந்துக்களும் நிலப்புரபுக்களும்அரசியல் அதிகாரமிக்கவர்களும் இக்கோரிக்கையை எதிர்க்கின்றனர்தனி தெலுங்கானாதெலுங்கு தேசத்தை பாதித்து விடும்என கூச்சலிடுகின்றனர்எல்லாமே அரசியல் பிரச்சினை தான்கல்விநதீ நீர்மாநிலஉரிமைகள் என எல்லாவற்றிலும் அரசியல் இழையோடிக் கொண்டிருக்கிறது.அரசியல் லாபநட்டக்கணக்கின் அடிப்படையில் தான் தீர்வுகளும் போராட்டங்களும் எதிர்ப்புகளும்உருவாகின்றனஒரு போராட்டத்திற்கு எப்போது ஆதரவு பெருகுகிறது என்றால் எப்போதுஅரசியலில் இலாபக்கணக்கு கூடுகிறது அங்கு ஆதரவும் கூடுகிறதுஎல்லாமே லாபநட்டக்கணக்கின் அடிப்படையில் தான்.இதே நிலை தான் தெலுங்கானா போராட்டத்திற்கும்.ஆளும் வர்க்கமும் உயர் சாதி இந்துக்களும் தெலுங்கானா பிரிவதால் யாருக்கு இலாபம்என்று கணக்கு பார்க்கின்றனர்.தெலுங்கானா உருவாவதால் யார் முதல்வர் ஆவார்அதி ல்அவர்களுக்கென்ன அரசியல் இலாபமிருக்கிறதுகாங்கிரசு அரசிற்கு என்ன லாபம்தேர்தல்வரும் நேரத்தில் தெலுங்கானா உருவாக்கினால் ஏதேனும் லாபம் கிடைக்குமா ? கடலோர ஆந்திரா என்றழைக்கக்கூடிய சீமாந்திர‌ பகுதியில் காழ்ப்பு நேருமா ? என எல்லாம் இலாபநட்டக்கணக்கின் அடிப்படையில் தான்.



---------------

No comments:

Post a Comment