Saturday, February 20, 2010

சிங்கள அரசு போர்க்குற்றவாளியே உலக மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு தமிழாக்கம் : பூங்குழலி

மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான லெலியோ பாசோ உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் ஜுன் 1979-இல், 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு வென்ற 5 பேர் உட்பட பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வியட்நாம் (1966-67) மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974-76) மீதான ரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களை தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது.
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் கூடிய இத்தீர்ப்பாயம் இலங்கைப் போரில் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற அட்டுழியங்கள் குறித்து விசாரனை நடத்தி விரிவான அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் சில பகுதிகள் இங்கு வெளியிடப்படுகின்றன.

போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற அட்டூழியங்கள்

பொதுவான பார்வையாளர்கள் முன் பல தொண்டு நிறுவனங்களும், தற்போது இலங்கையில் உள்ள 'உள்நாட்டுப் போரின்' நிலை குறித்து நிபுணர்களும் அளித்த பல அறிக்கைகளைத் தீர்ப்பாயம் கேட்டது. பெரும் எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குமூலங்களை அவர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு அவர்கள் அடையாளத்தை மறைக்க 'உள்ளக விசாரணை' முறையில் தீர்ப்பாயம் விசாரித்தது.
இந்த உள்நாட்டுப் போர் 'சாட்சிகளற்ற போர்' என்பது பல முறை தனது வேலைகளின் போக்கில் இத்தீர்ப்பாயத்திற்கு நினைவூட்டப்பட்டது. ஏனெனில் இலங்கை அரசு எவ்வித தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் அனுமதிக்கவில்லை. உண்மையில், தொடக்கக் காலத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் களே. விமர்சன கருத்துக்களை ஊமையாக்க நினைத்த இலங்கை அரசின் திட்டங்களுக்கு ஏற்ப நடைபெற்றதாகவே இவை இருந்தன. பெரும்பாலான நிபுணர்கள் மற்றும் சாட்சிகளின் கருத்தின் படி இது ஓர் உள்நாட்டுப் போர், இன அழிப்பை செயற்படுத்தும் ஒரு நடவடிக்கை, சொல்லப்போனால் இனப்படுகொலை என்றே கூறலாம். இதை ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்ள இலங்கை அரசு தயாராக இல்லை. மாறாக, கொள்கைகள் குறித்தும், போர், எண்ணிக்கைகள், மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலன் குறித்தும் தவறான தகவல்களை கொழும்பு பரப்பியது.
இந்த தவறான தகவல்கள், இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, கனரக ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் வான் வழித் தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொகையை குறைவாகவே கணக்கிட்டன. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மிகவும் சுருங்கிய நிலையில் இறுதியாக நடந்த பாரிய இடப்பெயர்வு தொடங்கிய போதுதான், அவ்வாறு இடம் பெயர்ந்த மக்களை எண்ணியபோதுதான் அரசு உள் ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தவறான தகவல் கொடுத்தது தெரிய வந்தது.


இராணுவம் மேற்கொண்ட அட்டூழி யங்கள் பொது மக்களோடு தொடர்புப் பட்டவையாகவே இருந்தன. போர் விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன. சர்வ தேச சட்டங்களுக்கு முரணாக வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாக சில சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர். காயப்பட்ட பொதுமக்களின் உடல்களில் தீக்காயங்களை பல சாட்சிகள் கண்டுள் ளனர். பிறர் நாபாம் போடப்பட்டதன் அறிகுறிகள் வெளிப்படையாக இருந்ததாக நம்புகின்றனர். வேறு பல எரியும் தன்மை யுள்ள பொருட்களுக்கான ஆதாரங்கள் இருந்ததை இம்மாதிரியானவைகளால் காயம்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக் களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிரற்ற உடல்கள் காணப்பட்டதை பல சாட்சிகள் உரைத்தனர். இதன் மூலம் காயம்பட்ட பலரோடு, பொது மக்களின் சாவு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் குறைந்த நிலையில் மனித நலன் சார்ந்த பொது கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாக இருந்தது. குறிவைக்கப்பட்ட வர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற பொது கட்டமைப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழ்விடங்களில் விடு தலைப்புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தொடர்ச்சியான எறிகணை தாக்கு தலானது ஜெனிவா ஒப்பந்த மீறலாகும். குடி நீர் பற்றாக்குறை, அடிப்படை மருத்துவ வசதிகள் இன்மை, தொடர்ந்து கல்வி வசதி கள் கிடைக்காத தன்மை ஆகியவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் அனைத்து அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டன. மேலும் இச்சூழலில் பொது மக்களின் சாவு எண் ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் உள் ஆவ ணங்களின் படி, ஏப்ரல் 2009 வரை, வான் வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங் களின் பயன்பாடு காரணமாக ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு போரின் இறுதி வாரங்களில் மட்டும் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்ட தாக பிரித்தானிய மற்றம் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.
சட்ட விரோதமான ஆயுதங்களை பயன்படுத்தியோ பயன்படுத்தாமலோ, தமிழ் மக்களை அழித்தொழிக்க முயல்வது என்பதே ஒரு வகையான போர்க் குற்ற மாகும். ஆயுத மற்றும் அரசியல் எதிர்ப்புக் களை அடக்குவதன் மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப் படுகொலை செய்வதையே தனது நோக்கமாகக் கொண்டிருந்ததா என்ற கேள்வி எழுகிறது. நிபுணர்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலம் இராணுவம் முற்றிலும் பொது மக்கள் வாழ் விடங்களாக மட்டும் இருந்த பகுதிகளான மருத்துவமனைகள், தப்பிச் செல்லும் இடம் பெயரும் மக்கள் மற்றும் நிறைய கிராமங் கள் போன்றவற்றையே தாக்கியதாக உறுதி யாகத் தெரிகிறது. மேலும், தாமாக முன் வந்து சரணடைந்த தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கக் கைதிகள் ஆகியோர் இராணுவத்தால் கொலை செய் யப்பட்டதற்கு போதுமான ஆதாரம் உள் ளது. இது இன அழிப்புக் குற்றச்சாட்டிற்கும் சர்வதேச சட்டங்களை மீறியதான குற்றச் சாட்டிற்கும் பெரிதும் சான்றுகளாக உள்ளன.
எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன் னர் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பிற அடக்குமுறைகள் மற்றும் வன்கொடுமை கள் குறித்து ஆராயவேண்டும். இடம் பெயர் 'முகாம்கள்' அல்லது 'தடுப்பு முகாம்கள்' (வாக்குமூலங்களில் குறிப்பிட்டுள்ள படி) பற்றி சாட்சிகளின் வாக்குமூலங்கள் கவனத்திற்குரியவை. தடுத்து வைக்கப் பட்டுள்ள மக்கள் தங்கள் சொந்த வீடு களுக்குத் திரும்பும் வரையிலோ அல்லது மறு குடியமர்த்தப்படும் வரையிலோ தங்குவதற்கான இடை தங்கல் முகாம்கள் என்று அரசாங்கத்தால் வர்ணிக்கப்படும் இம்முகாம்கள், நலன்புரி கிராமங்களாகவே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படி 15 முகாம்கள் ஒதுக்கப்பட்டன. அந்த முகாம் களில் நடப்பவை தொடர்ந்து ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் மனித உரிமைக்கான அனைத்துலக அறிக்கை ஆகியவற்றை மீறுபவையாகவே இருக்கின்றன. அந்த முகாம்களுக்குள் நடந்த பல வேதனை யான நிகழ்வுகள் குறித்து தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களிடம் புகார் செய்யப்பட்டது. ஒருவருக்கு ஒதுக்கப்படும் வாழ்விடம் மிகச் சிறியதாக இருந்தது. கூரை தகரத்தால் போடப்பட்டிருந்தது. இதனால் வெயில் காலங்களில் வெப்பத்தினால் உடல்நலன் பாதிக்கப்பட்டு, சரும நோய்கள் ஏற்படு கின்றன. பலர், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மற்றும் வயதானவர்களும் காலரா, மற்றும் சத்துக் குறைவினால் மரணமடைந்திருக்கின்றனர். நீர் வழங்கல் ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தது. ஒரு குடும்பத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு நாளைக்கு 5 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டது. இது போதாதது மட்டுமல்ல, சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுத்தது. அடிப்படை சுகாதாரம், கழிவறை பயன்பாடு மற்றும் துணி துவைப்பதற்கு தேவையான நீர் கிடைக்கவில்லை. அதிலும் பெரும் பாலானவர்களுக்கு உடுத்தியிருந்த உடை மட்டுமே இருந்தது. குப்பைகள் அந்தந்த இடங்களிலேயே கிடந்தன. கழிவுத் தொட்டிகள் சிமெண்ட்டால் கட்டப்படாததால் அடிக்கடி உடைந்து, கழிவு நீர் வெள்ளமாக வெளியேறி, சில சமயங்களில் சில குழந்தை கள் அவற்றில் மூழ்கி இறக்கும் அளவிற்கு இருக்கிறது. நிறைய குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்று இருக் கின்றனர். அல்லது பெற்றோரில் ஒருவரின் ஆதரவில் மட்டும் உள்ளனர். இதனால் முகாம்களில் நிலவும் பல்வேறு அச்சுறுத்தல் களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளாக நேர்கிறது.

ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மற் றொரு அரசுக் கொள்கை என்னவெனில், தமிழ் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கி அவர்களைப் பணிய வைக்கும் ஆயுதமாக உணவு வழங்கலை நிறுத்தி வைத்தது. உணவு வழங்கலை தடை செய்தது, மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டது ஆகியவை ஆபத்தான உணவுப் பற்றாக்குறைக்கு வழிகோலின. அதோடு கூடுதலாக தமிழ்ப் பகுதிகளுக்கு மருந்து வழங்கலையும் தடை செய்ததும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததும் மனித உரி மைச் சட்டங்களுக்கு எதிரானதும் ஆகும்.
அழிக்கப்பட்ட கிராமங்களிலும், 'நலன்புரி கிராமங்களிலும்' அரசு இராணுவம் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன் கொடுமைகளும், வல்லுறவுகளும் போர்க் காலம் முழுவதிலும் அரச படையால் தொடர்ந்து நடத்தப்பட்ட மற்றுமொரு பாரிய கொடுமையாகும். மனித குலத்திற்கு எதிரான குற்றமாக ரோம் சட்டத்தில் குறிக்கப்படும் இது, கருக்கலைப்பு, குடும்ப பெருமைக்கு இழுக்கு, அவமானம், மன உளைச்சல்களு டன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்டது பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற மேலும் பல துயரங்களுக்கு வித் திட்டது. இப்படி குறிவைத்து நடத்தப்படும் கொடுமைகளுக்குப் போர்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் தமிழர்களும் பலியாயினர். பெரும் எண்ணிக்கையில் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமை தவிர, கடத் தல், படுகொலை, முன்அறிவிப்பற்ற கைது கள், தடுத்து வைத்தல், பாலியல் வன்கொடு மைகள் மற்றும் சித்ரவதைகள் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பிரச்சாரமும் நடந்தது.
மேலே உள்ள பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை, மனித உரிமை கண்காணிப்பகம் (28.07.2009 மற்றும் 24.11.2009), சர்வதேச மன்னிப்பு சபை (10.08.2009) மற்றும் கொள்கை மாற்றுகளுக்கான மய்யம் (செப்டம்பர் 2009) ஆகியவற்றின் அறிக்கைகளில் காணலாம்.
தமிழ்த் தலைவர்களை குறிவைத்து படுகொலை செய்தல் மற்றொரு கொடுமை யாக இருந்தது. அதிலும் இப்படியான படு கொலைகளில் முக்கியமாக இராணுவத்தின் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராசா ரவிராஜ் மற்றும் டி. மகேசுவரன் ஆகியோர் குறிவைத்துக் கொல்லப்பட்டது முக்கியமானது.
விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என அறிவித்த 1979-இன் பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் பல்வேறு கொடுமை களுக்கு வழிவகை செய்த அரசின் கொள்கைகளுள் முக்கியமானதாகும். அது சட்டத்திலும் இராணுவ சட்ட அமைப்பிலும் உள்ள பாதுகாப்புகளைக் குறைத்து அவற் றைப் தவறாக பயன்படுத்த வழி செய்தது.
இறந்தவர்களின் உடல்கள் அவமரி யாதை செய்யப்பட்டதும் சாட்சிகள் மூலம் தெரிய வருகிறது.
சுருக்கமாக, விடுதலைப் புலிகள் படையினரின் அச்சுறுத்தலை நீக்கவும், தமிழ் மக்கள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தவும், இலங்கை அரசு, உலகளாவிய சட்டங்கள், ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றிற்கு எதிரான ஓர் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இதனால் விளைந்த கொடுமைகளான வல்லுறவு, சித்ரவதை, படுகொலைகள், 'காணாமல் போதல்', மற்றும் உணவு, நீர் மற்றும் மருந்து வழங்கலை தடை செய்தமை ஆகியவை தமிழ்ச் சமூகத்தின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தன. கனரக ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களான வெள்ளை பாஸ்பரஸ் மற்றும் கொத்து குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தியதானது உலகளாவிய சட்ட நிலைகளுக்கு அப்பால் இலங்கை அரசை நிறுத்தியுள்ளன. வன்கொடுமைகள், இன அழிப்பு, சொல்லப் போனால் இனப் படு கொலை ஆகிய குற்றங்கள் கொழும்பில் திட்டமிடப்பட்டன என்பது ஆச்சரியமளிக்க வில்லை. போர்க் குற்றங்களும், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களும் நடந் துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், நிபுணர்களின் வாக்குமூலங்கள், ஊடக அறிக்கைகள் என இத்தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப் படையில் கடந்த 2002 முதல் (போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து) இன்று வரை இலங்கை அரசால் மூன்று வகையான மனித உரிமை மீறல்கள் செய் யப்பட்டுள்ளன என நாங்கள் வரையறுக்கிறோம்.
• தமிழ் மக்களைக் குறி வைத்து நடத் தப்பட்ட வலுக்கட்டாயமாக 'காணா மல் அடித்தல்'
• போர் மீண்டும் தொடங்கிய பிறகு நடந்த குற்றங்கள் (2006-2009), குறிப் பாக போரின் இறுதி மாதங்களில்.
• இராணுவ இலக்குகள் அல்லாத மக் களின் பொது கட்டமைப்புகளான மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகிய வற்றின் மீது குண்டுவீச்சு நடத்தியது
• அரசு அறிவித்த 'பாதுகாப்பு வளையங்கள்' மற்றும் 'தாக்குதலற்ற பகுதிகள்' மீது குண்டுவீச்சு நடத்தியது
• போர்ப் பகுதிகளில் உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகளைத் தடுத்தது
• கனரக ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வான் வழித் தாக்குதல்களை பயன் படுத்தியது
• உணவு மற்றும் மருந்தை போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது
• கைது செய்யப்பட்ட அல்லது சரண டைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை மோசமாக நடத்தியது, சித்ரவதை செய்தது மற்றும் கொலை செய்தது
• சித்ரவதை
• பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வல்லுறவு
• தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை வலுகட்டாயமாக வெளியேற்றியது
• இறந்து போனவர்களின் உடல்களை சேதப்படுத்தியது
• போரின் போதும் அதற்குப் பிறகும் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள்
• தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களை சுட்டுக் கொலை செய்தது
• வலுகட்டாயமாக காணாமல் அடித்தல்
• வல்லுறவு
• சத்துக்குறைவு
• மருத்துவ உதவிகள் பற்றாக்குறை
போர்க் குற்றங்கள்

மேலே 2ஆவதாக குறிப் பிட்டுள்ள செயல்களானது இலங்கை அரசாங்கம், அதன் பாதுகாப்புப் படைகள், அதனுடன் இணைந்த துணை ஆயுதப் படைகள் ஆகியவை ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ரோம் சட்டத்தின் பிரிவு 8-இன் கீழ் வரை யறுக்கப்பட்டுள்ள 'போர்க் குற்றங்களை' புரிந்துள்ளதை தெளிவாக்குகின்றன. ரோம் சட்டத்தின் பிரிவு 8 கீழ் வருமாறு கூறுகிறது:
இந்த போரானது நாடுகளுக்கு இடையிலானது என்றால் கீழ்க்காணும் குற்றச்சாட்டுக்கள் பொருந்தும் :
(b) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடை யிலான போர்களில் பின்பற்றப்பட வேண் டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது கீழ்க் காணும் செயல்களை உள்ளடக்கும் :
(i) பொது மக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடி தாக்குதல்கள்
(ii) இராணுவ இலக்கல்லாத பொது கட்டமைப்புகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது
(iii) தெரிந்தே திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி அதன் மூலம் அதனால் கிடைக்கக் கூடிய இராணுவ இலாபத்தை விட அதிகமாக உயிர்கள் கொல்லப்படுவது, பொது மக்களுக்கு காயம் ஏற்படுத்துவது, பொது கட்ட மைப்புகள் பொது மக்கள் உடைமைகள் ஆகியவற்றை பரவலாக சேதப்படுத்து வது, இயற்கை சூழலுக்கு நீண்ட கால மற்றும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்து வது ஆகியவை
(vi) ஆயுதங்களை கைவிட்டு விட்ட அல்லது ஆயுதங்கள் இல்லாத அல் லது தாமாக முன் வந்த சரணடைந்த ஒருவரை கொல்வது அல்லது காயப் படுத்துவது
(ix) மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப் பட்ட கட்டடங்கள், வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த கட்ட டங்கள், மருத்துவ மனைகள் அல்லது இராணுவ இலக்காக அல்லாத காயம் பட்டவர்களோ நோய் வாய்ப்பட்ட வர்களோ கூடியிருக்கக் கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்
(xxi) தன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்தல் அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது
(xxii) வல்லுறவு, பாலியல் அடி மைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (க)-இல் குறிப்பிடப் பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவையும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.
(xxv) ஜெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிவாரணப் பொருட் களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது உட்பட பொது மக்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்களை தடுப்பதன் மூலம் பட்டினியை போரில் ஓர் ஆயுதமாக பயன்படுத்துவது
மோதல் உள்நாட்டுத் தன்மையு டையதாயின் கீழ்க்காணும் குற்றச் சாட்டுக்கள் பொருந்தும்
(c) சர்வதேச அளவில் அல்லாத ஆயுத மோதலெனில், 12 ஆகஸ்ட் 1949 தேதியிட்ட 4 ஜெனிவா ஒப்பந்தங்களில் பொதுவாக உள்ள பிரிவு 3-அய் மீறுவ தானது, மோதலில் நேரடி பங்கு கொள்ளாத வர்கள், அவர்கள் ஆயுதப் படையின் பகுதியாக இருந்தாலும், ஆயுதத்தை கைவிட்டவர்கள் அல்லது நோய், காயம் அல்லது தடுத்து வைப்பு அல்லது பிற காரணங்களுக்காக போரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு எதிராக கீழ்காணும் செயல்களை செய்வதாகும்.
(i) உயிருக்கும் மனிதர்களுக்கும் எதிரான வன்முறை,- குறிப்பாக எல்லா வகையிலான கொலைகள், சிதைத்தல், கொடூரமாக நடத்துதல் மற்றும் சித்ரவதை
(ii) தன் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்தல் அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது
(iii) பணயக் கைதிகளாக பிடித்து வைத்தல்
(iv) நடைமுறையில் உள்ள ஒரு நீதிமன்றத்தால், அனைத்து சட்டப்பூர்வ மாக பாதுகாப்புகளும் வழங்கப்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட ஒரு முன் னோடி தீர்ப்பு இல்லாத நிலையில் வழங்கப்படும் தண்டனைகள் அல்லது கொலைகள்
(c) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடையில் அல்லாத போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது கீழ்க் காணும் செயல்களை உள்ளடக்கும் :
(i) பொது மக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடி தாக்குதல்கள்
(iv) மதம், கல்வி, கலை, அறிவி யல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக் கப்பட்ட கட்டடங்கள், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கட்டடங்கள், மருத்துவ மனைகள் அல்லது இராணுவ இலக்காக அல்லாத காயம்பட்டவர்களோ நோய் வாய்ப்பட்டவர்களோ கூடியிருக்கக் கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்
(vi) வல்லுறவு, பாலியல் அடிமைத் தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2 (க) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி யான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவையும் ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.
எனவே, இலங்கையில் நடை பெற்ற போரை சர்வதேச அளவிலானது என்று கருதினாலும் உள்நாட்டுப் போர் என்று கருதினாலும் இலங்கை அரசு புரிந்துள்ள போர்க் குற்றங்களை நாம் தெளிவாக கண்டுள்ளோம்.
மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள்




முதலாவதாகவும் (வலுக்கட்டாய மாக காணாமல் அடித்தல்) மூன்றாவதும் (இடம் பெயர் முகாம்களில் போரின் போதும் அதற்கு பிறகும் நடைபெற்ற மீறல்கள்) குறிப்பிடப்பட்டுள்ள செயல்களானது, ரோம் சட்டம் பிரிவு 7-இல் கொண்டுள்ளபடி தெளிவாக மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களாகும். அதிலும் குறிப்பாக கீழ்காணும் பிரிவு களின்படி :
கீழ்காணும் ஏதேனும் செயல்கள், ஒரு பரவலான அல்லது திட்டமிட்ட தாக்குதலின் பகுதியாக, ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது, தெரிந்தே நடத்தப் படுமாயின் :
(a) கொலை
(b) படுகொலை
(d) வெளியேற்றுதல் அல்லது மக்களை கட்டாயப்படுத்தி இடம் மாற்றுதல்
(e) உலகளாவிய சட்டங்களில் கூறப்பட்டுள்ள அடிப்படை சட்டத் திட்ட ங்களை மீறி சிறை வைத்தல் அல்லது நடமாட தடை விதித்தல்
(f) சித்ரவதை
(g) வல்லுறவு, பாலியல் அடிமைத் தனம், வலுக்கட்டாய விபச் சாரம், பிரிவு 7 பத்தி 2 (க) -இல் குறிப் பிடப்பட்டுள்ளபடி யான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள்
(h) ஒரு குறிப்பிட்ட குழுவினர் அல்லது பத்தி 3-இல் விளக்கப் பட்டுள்ள படியான அரசியல், மரபின, இன, பண் பாட்டு, மத, பாலியல் அல்லது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற அடிப்படை களில் உள்ள ஒரு கூட்டத் தினர் மீது நடத் தப்படும் வன்கொடு மைகள் அனைத்துல கச் சட்டத்தின்படி அனுமதிக்க முடியாது.
(i) வலுகட்டாயமாக காணாமல் அடித்தல்
(k) பெரும் துன்பத்தையோ அல்லது பெரும் உடல் காயத்தையோ அல்லது உளவியல் அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடிய இதையொத்த பிற மனிதத்தன்மையற்ற செயல்கள்.
இனப் படுகொலை எனும் குற்றத்தை செய்திருப்பதற்கான சாத்தியங்கள்

இனப்படுகொலை குற்றச்சாட்டை விசாரிக்க தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைக்கப்படவில்லை எனினும், வாக்கு மூலங்கள் அளித்த சில நிறுவனங்களும் தனிநபர்களும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் மீது இனப்படுகொலை நடந்தது அல்லது நடந்திருக்கலாம் என் பதை அங்கீகரிக்குமாறு கூறினர். போர்க் குற்றம் மற்றும் மனிதக் குலத்திற்கு எதி ரான குற்றத்துடன் இனப்படுகொலைக் குற்றச் சாட்டையும் இணைக்கும் அளவிலான ஆதாரங்கள் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப் படவில்லை. சில உண்மைகள் அவை இனப்படுகொலைச் செயல்களாக இருக்கக் கூடும் என்ற அளவில் முழுவதுமாக ஆரா யப்படவேண்டும். அப்படியான உண்மை களில் கீழ்காணுபவையும் அடங்கும் :
- 'ஒரு குழுவினர் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைகளை' அழிக்க என்று லெம்கின் கூறியது போல் (இங்கு தமிழ்க் குழுவினர்) தமிழ்ச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக (ஊடகவியலாளர்கள், மருத்து வர்கள், அரசியல்வாதிகள்) இலங்கை ஆயுதப் படையினரும், அரசின் ஆதர வோடும் வழிகாட்டுதலோடும் செயல் பட்ட துணை இராணுவக் குழுவினரும் மேற்கொண்ட தனிநபர்களை வலுக் கட்டாயமாக 'காணாமல் போகச்' செய்த முறை
- இடம் பெயர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களின் நிலை தொடர் வது. சுட்டுக் கொல்லப்படுதல், திட்ட மிட்ட வல்லுறவு, வலுகட்டாயமாக 'காணாமல் போகச் செய்தல்'. நாட்டில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பரவலாக அழிக்கப் பட்ட கட்ட மைப்புகள். தமிழ் மக்கள் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைத் தேவை களான உணவு, மருந்து போன்ற வற்றிற்கு பற்றாக்குறை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போதைய நிலை என்றாலும், அவற்றை குற்றச்சாட்டுகளில் இணைக்க போதுமான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைக்க வில்லை. எனினும், இனப்படு கொலை நடந்திருக்கலாம் என்ற நோக் கில் தொடர்ந்த விசாரணையை மேற் கொள்ள வேண்டியதன் முக்கியத் துவத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்கிறது.
மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இருக்க எந்த ஒரு மனிதனுக்கும் உள்ள உரிமை
'பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்' என்று சொல்லப் படுகிற விசயமானது, இத்தகைய போர்களில் செய்யப்படும் எந்த ஒரு செயலும், மிக ஆபத்தான ஓர் எதிரியை அழிக்க வல்ல சிறந்த வழியாக கருதப்பட்டு அனுமதிக் கப்படவேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறது. இந்த புதிய பாதுகாப்பு மாதிரியானது, மக்களில் 'பயங்கரவாதிகள்' என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்துவித மனித உரிமை மீறல்களையும் நியாயப் படுத்துகிறது. 'பயங்கரவாதிகள்' என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புரிந்த குற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களும் மனித உரிமை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வருவார்கள் என்பது இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அடிப்படை யான கருத்தாகும். பாதிக்கப்பட்டவர்களின் எந்த ஒரு குற்றமும், இத்தீர்ப் பாயத்தினால் உறுதி செய்யப்பட்ட எந்த ஒரு போர்க் குற் றத்தையும் அல்லது மனிதக் குலத்திற்கு எதிரான குற்றத்தையும் நியாயப்படுத்த முடியாது.
இதனை முக்கியத்துவப்படுத்து வதன் காரணம் என்னவெனில், இந்த புதிய பாதுகாப்பு மாதிரிக்குள், 'பயங்கர வாதிகள்' அல்லது வேறு ஏதேனும் தீவிர பெயரில் முத்திரைக் குத்தப்பட்ட மக்கள், ஒட்டு மொத்த மனித குலத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதனால் மனித உரிமைச் சட்டத்தின்படி உறுதி செய்யப்பட்ட எந்த பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது. இந்த கருத்தானது மனித உரிமைச் சட்டங்களின் இருப்பையே மறுப்பதாகும்.
சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு

தீர்ப்பாயத்திடம் இறுதியாக அளிக் கப்பட்ட குற்றம் - 'சமாதானத்திற்கு எதிரான குற்றங்கள்'. இலங்கை அரசும் அதனுடன் வேறு சில அந்நிய சக்திகளும் இணைந்து ஒரு வெறுப்புக் கொண்ட போரையே நடத்தின என்று குற்றம்சாட்டப்படுகிறது. நூரெம்பெர்க் தீர்ப்பாயத்தில் சமாதானத் திற்கு எதிரான குற்றங்கள் விளக்கப்பட்டுள் ளன : (அ) வெறுப்பின் மீது கட்டமைக்கப் பட்ட ஒரு போரையோ அல்லது சர்வதேச ஒப்பந் தங்கள், உடன்பாடுகள், அல்லது வாக்குறுதிகள் ஆகியவற்றை மீறிய ஒரு போரையோ நடத்த திட்டமிட்டு, ஆயத்த மாகி, தொடங்கி நடத்துவது (ஆ) அப்படியான செயல்களை முடிப்பதற்கான ஒரு பொதுத் திட்டத்திலோ அல்லது சதித் திட்டத்திலோ பங்கேற்பது.
இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள் வதில் தீர்ப்பாயத்திற்கு உள்ள சிக்கலானது - தீர்ப்பாயத்தின் முன் இக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த வைக்கப் பட்ட சாட்சியங் களால் மட்டுமல்ல - ஆனால் கூடுதலாகவும் முக்கியமாகவும், இக்குற்றச்சாட்டை மனித உரிமைச் சட்டங்களின் பகுதியாக ஏற்றுக் கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
சமாதானத்திற்கு எதிரான குற்றம் என்பது, சமாதானம் நிலவும் சூழலில், இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் வன் முறை யான ஒரு போரைத் தொடங்குவ தன் மூலம் இந்த சமாதானச் சூழலை உடைப்பது.
என்றபோதும், மனித குலம் அவலத்தை எதிர்நோக்கிய பெரும்பாலான ஆயுத மோதல்களில் ஒரு குழப்பமான மற்றும் சிக்கலான நோக்கிலிருந்து சூழலை ஆராயலாம். ஒரு போரில் முதன் முதலில் தாக்குதலைத் தொடங்கியவர் யாரென முடிவு செய்வது கடினமானது மட்டுமல்ல சார்பானதாகவும் ஆகிவிடுகிறது. ஒடுக்கு முறையானது பல ஆண்டுகள் சேர்ந்து கொண்டே போய் ஒரு இக்கட்டான நிலையில் வினையாற்றும் போது அது ஒரு வன்முறைப் போரின் தொடக்க செயலாகி விடுகிறது.
இதுதான் இலங்கையில் பல ஆண்டுகள் நடந்த போரின் நிலையும். எந்த பக்கம் நின்று இந்த மோதல் ஆரா யப்படுகிறது என்பதை பொருத்து யார் 'சமாதானத்திற்கு எதிரான குற்றத்தைப்' புரிந்தனர் என்பது முடிவாகும். அதனால் தான் இக்குற்றத்தைப் பொருத்த வரையில் தீர்ப்பாயம் குறிப்பானக் குற்றச்சாட்டுக்களை ஏற்கவில்லை.
இருந்தபோதும், கிடைத்த ஆதா ரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப் படையில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பை உணரும் அதே வேளை யில், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்க எவ்வித காத்திரமான முன்னெடுப்பு களையும் அது மேற் கொள்ளவில்லை என்பதையும் தொடர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங் களையும் அது புறந்தள்ளிவிட்டது என்பதையும் உணருகிறது.
போரின் இறுதி காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டிய தார்மீக பொறுப்பை நிறை வேற்றாது விட்ட அய்க்கிய நாடுகள் அவை யின் உறுப்பு நாடுகளுக்கு இத்தீர்ப்பாயம் அந்த பொறுப்பினை வலியுறுத்துகிறது. தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பிறகும், தமிழர்கள் அனுபவித்த மோச மான சூழல்களுக்குப் பிறகும், சில உறுப்பு நாடு களின் அழுத்தம் காரணமாக, அய்.நா மனித உரிமைகள் ஆணையமும், அய் நா பாதுகாப்பு ஆணையமும் நடந்த கொடுமைகளை விசாரிக்க ஒரு சுதந்திரமான ஆணை யத்தை அமைக்கத் தவறி விட்டன.
2002-இன் போர் நிறுத்த ஒப்பந் தத்தை அய்ரோப்பிய ஒன்றியம் வலு விழக்கச் செய்ததையும் இத்தீர்ப்பாயம் முன்னிறுத்துகிறது. ஒரு சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதை யும் அதன் விளைவுகளையும் நன்கு அறிந்த நிலையிலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அழுத்தத்தின் காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக் கிய தமிழ்ப் போராட்டக் குழுவினை பயங்கரவாதிகள் இயக்கமென பட்டியலிட அய்ரோப்பிய ஒன்றியம் 2006-இல் முடிவெடுத்தது. இந்த முடிவானது, இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற் கொள்ள அனுமதித்தது. அதன் விளைவாகவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதமான மீறல்களும் நடை பெற்றன. அதோடு தமிழர்களை குறி வைத்து நடத்தப்பட்ட ஒரு போரில் இலங்கை அரசாங்கம் அதன் ஆயுதப் படைகள் ஆகியவற்றின் நடத்தைகளுக்கு ஒரு அரசியல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தன் முழுப் பொறுப்பையும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை' நடத்தும் அமெரிக்கா தலைமையிலான நாடு களையே சாரும் என தீர்ப்பாயம் சுட்டிக் காட்டுகிறது.
அதோடு, இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் வழங்கியதற்காக பல நாடுகளுக்கு நேரடி பொறுப்பு இருப்பதையும் இத்தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது. இதில் சில ஆயுதங்கள் 'சில மரபு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தம்' போன்ற பல ஒப் பந்தங்களினால் தடை செய்யப்பட்டுள்ளன. அதோடு இதில் சில நாடுகள், போர் நிறுத் தக் காலக்கட் டத்தில் இலங்கை இராணுவப் படையினருக்கு பயிற்சியும் அளித் திருக்கின்றன.
இலங்கை அரசுக்கு

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசுக்குக் கீழ்காணும் பரிந்துரைகளை செய்கிறது :
- 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு போரின் இறுதிக் கட்டங்களில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பிலும் புரிந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் மற்றும் போர்க் குற்றங் களையும் விசாரிக்க உடனடியாக, சூழலின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, சுதந்திரமான அதிகார முடைய 'உண்மை மற்றும் நீதிக்கான ஆணையம்' ஒன்றை அமைத்து, போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தகுந்த தண்டனை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- உடனடியாக அவசர நிலையை விலக்கிக் கொள்வதன் மூலமும், 1979-இன் பயங்கரவாத தடுப்புச் சட் டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலமும் தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.
- 12,000-க்கும் அதிகமான அரசி யல் கைதிகளின் பாதுகாப்பையும் கெளர வத்தையும் உறுதி செய்து, உலகளாவிய நடைமுறைகளின்படி அவர்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தி னர் சந்திக்கவும் சட்டப் பூர்வமாக தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்.
- உள்ளுர் மற்றும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள், மனித உரிமை காப் பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற் றும் சுதந்திரமாக செயல்படும் தன் மையை உறுதிப்படுத்துவதோடு அவர் களின் சட்டப் பூர்வமான மனித உரிமை களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
- அனைத்து துணை இராணுவக் குழுக்களையும் கலைத்துவிட்டு, தமிழ்ப் பகுதிகளில் இராணுவப் படைகளின் இருப்பை குறைக்க வேண்டும்.
- வடகிழக்கின் நிருவாகம் மற்றும் மேலாண்மையில் தமிழர்களுக்கு செயல் படத்தக்க சட்டப்பூர்வமான பங்கெடுப் பினை வழங்கக் கூடிய அரசியல் அதி காரப் பங்கீட்டுத் தீர்வை நடைமுறைப் படுத்தி, சம குடியுரிமைக்கு அவர் களுக்கு இருக்கும் உரிமைகளை ஏற்றுக் கொண்டு, அனைத்து நிலைகளிலும் அவர்கள் பங்கெடுக்கவும் பிரதிநிதித்து வப்படுத்தவும் வாய்ப்பு வழங்கி, மே 2010-இல் நடைபெற உள்ள நாடாளு மன்றத் தேர்தல் சுதந்திர மாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற உறுதிப்படுத்த வேண்டும்.
- அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தை ஏற்படுத்தக் கூடிய ரோம் ஒப் பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முகாம்களில் உள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை பொருத்த அளவில் 'நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்' கீழ்காணுபவற்றை பரிந்துரைக்கிறது :
- அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற மனித நேய அமைப்புகள் சுதந்திரமாகவும் தடையின்றி யும் முகாம்களுக்கு சென்றுவர அனுமதிக்க வேண்டும்.
- முகாம்களை இராணுவத்திட மிருந்து சிவில் நிருவாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்க ளின் முழு ஒத்துழைப்புடன் பன்னாட்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் சிவில் அதிகாரிகளின் நிருவாகத்தில் தமிழர்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்யவேண்டும்.
- அய் நாவின் உள்நாட்டில் இடப் பெயர்விற்கான வழிகாட்டு நெறி முறைகள் போன்றவற்றில் கூறப்பட் டுள்ள தரத்தில் பாதுகாப்பாக திரும்பவும், திரும்புபவர்கள், புனர்வாழ்வு மற்றும் மறு கட்டமைப்பு செயல்களை சுதந்திரமான பன்னாட்டு கண்காணிப்பிற்கு அனுமதிக்கவும் வேண்டும்.
- பாதிப்புக் குறித்த மதிப்பீடு, மனித ஆய்வுகள் ஆகியவற்றை மேற் கொண்டு, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து சரியான மதிப்பீட்டிற்கு பின் அதற்கான இழப்பீட்டினை நிர்ணயிக்க ஒரு சரியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.
- பெண்கள், குழந்தைகள், பிரிந்து விட்ட குடும்பங்கள், அடிப்படை சேவை கள் சென்றடைதல், போருக்குப் பின் னான புனர்வாழ்வு, கல்வி மற்றும் உடல் நலன் மற்றும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தம் மற்றும் மனப் பிறழ்வுக் கான சிகிச்சை உட்பட்ட உளவியல் நலன் ஆகிய வற்றை குறிப்பாக கவ னிக்க வேண்டும்.
உலக சமூகம், நிதியளிக்கும் அரசுகள் மற்றும் அய்க்கிய நாடுகள் அவை ஆகியவற்றிற்கு

மேற்கூறப்பட்டவர்கள் கீழ்காணு பவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பாயம் வேண்டுகிறது
• மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள், மனித உரிமைச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்து அதற்குப் பொறுப்பாளர்களை அடையாளம் காண இலங்கைக்கென அய்நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
• போர் நிறுத்த ஒப்பந்த சீர்குலைவுக்கும் அதனைத் தொடர்ந்த போர்க் குற்றங் கள் மற்றும் மனித குலத்திற்கு எதி ரானக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் உலக சமூகம் எந்த அளவுக்குப் பொறுப்பானது என்பதையும், போர் நிறுத்தக் காலத்தில் இலங்கை அரசுக்கு அவை ஆயுதங்கள் வழங்கியமை குறித்தும் விசாரிக்க பொறுப்பான, புகழ் பெற்ற தனி நபர்களைக் கொண்ட ஒரு சுதந் திரமான குழுவை அமைப்ப தற்கு துணை நிற்க வேண்டும்.
• தமிழ் மக்களின் மனித உரிமைகளின் நிலை குறித்தும், தமிழர் புனர்வாழ்வு மற்றும் மறு குடியமர்த்தும் பணிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை மீட்க மேற்கொள்ளப் படும் முயற்சிகள் குறித்தும் சுதந்திர மாக கண்காணிக்க அய் நா மனித உரி மைகள் ஆணையத்தின் செயல் அலு வலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.
• அமைதி மற்றும் போர் நிறுத்த நட வடிக்கைகளையும், கண்ணி வெடி அகற்றல், புனரமைப்பு, தமிழர்களின் விருப்பம் மற்றும் விருப்பத்திற்கேற்ற போருக்குப் பின்னான மறு கட்ட மைப்பு ஆகியவற்றிற்கு துணையாக நிதியளிக்கும் நிறுவனங்களின் நட வடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பன்னாட்டு மற்றும் கூட்டு நடவடிக் கைப்படை ஒன்றை உருவாக்க வேண்டும்.
• தமிழ் மக்களின் நிலைத்த வாழ்விற் கும், அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமானவற்றை அளிக்க வும், சிங்களர்களுக்கும் தமிழர்களுக் கும் இடையே பண்பாட்டுப் பகிர்வு மற்றும் உரையாடல்களுக்கும் வழி வகுக்கக் கூடிய நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்கவும் வேண்டும்.
• சுனாமி நிவாரணம் மற்றும் பேரவலத் திற்குப் பின்னான மறு கட்ட மைப்புக் காக வழங்கப்பட்ட பன் னாட்டு அவசர கால மற்றும் வளர்ச்சி நிதிகளின் இறு திப் பயன்பாடு மற்றும் சரியானபடியான மறுபகிர்வு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
• 2010-இல் நடக்க இருக்கிற நாடாளு மன்றத் தேர்தலை கண்காணிக்க ஒரு சிறப்பு பன்னாட்டு தேர்தல் கண் காணிப்புக் குழுவினை நியமிக்க வேண்டும்.
• இலங்கை சிறைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12,000 அரசியல் கைதிகள் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசார ணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
இறுதி குறிப்புகள்

தங்களுடைய வாழ்வை மிக ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்து விட்ட உண்மைகளை வாக்குமூலங் களாக அளிக்க துணிச்சலுடன் முன் வந்த நேரடி சாட்சிகளின் அடிப்படை பங்களிப்பை குறிப்பாக அங்கீகரிக்காமல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது பணியை முடிக்க இயலாது. எண்ணற்ற அளவில் பாதிக்கப் பட்ட மக்களின் சரியான பிரதிநிதிகள் இவர்களே. அவர்களின் துன்பத்தை முழுமையாக விவரிக்கவே இயலாது. அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அங்கீகரிப்பதுமே நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இருப்பிற்கும் செயற் பாட்டிற்குமான காரணங்கள்.
தங்கள் நாட்டில் நடந்த கொடு மைகளை நேரடியாக கண்டவர்கள், தற்போதைய சூழலில், அவர்களது சுதந் திரம் மற்றும் உயிர் மீது நேரடியாகவோ அல்லது அவர்களது குடும்பத்தினர் மீதான தாக்குதல்கள் மூலமாகவோ அவர்களது உரிமைகள் மேலும் பறிக் கப்படலாம் என்பதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நன்கு அறிந்திருக்கிறது.
எனவே எங்களிடம் வாக்கு மூலங்கள் அளித்தவர்களுக்கோ அல் லது அவர்களின் குடும்பத்தினருக்கோ ஏதே னும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு எங்கள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரி களும், குற்றம் புரிந்தவர்களுமே முழுப் பொறுப்பு என நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவிக்கிறது. தீர்ப்பாயத்தின் உண்மை அறியும் முயற்சிக்கு துணிச்சலுடன் தங்கள் பங்களிப்பை நல்கிய சாட்சிகளின் பாது காப்புக் குறித்து சீரிய கவனம் செலுத்து வதை எங்கள் முக்கிய கடமையாக ஏற்கி றோம். அவர்களில் யாருக்கேனும் ஏதேனும் நேர்ந்தால், அதற்கு இலங்கை அரசே பொறுப்பென நாங்கள் உறுதிபட கூறுகிறோம்.
எங்கள் பணிக்கும் திட்டங்களுக் கும் பங்களிப்பை நல்கியதற்காக சாட்சி கள் துன்பப்படும் எந்த விளைவையும் கண்காணிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும் நேரடியான பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் என்றும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உறுதி கூறுகிறது

No comments:

Post a Comment